
கோலிவுட் உலகில் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே திரைத்துறையில் பயணித்து வரும் பயில்வான் ரங்கநாதன், கடந்த 1983 ஆம் ஆண்டு இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான "முந்தானை முடிச்சு" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ச்சியாக பல தமிழ் திரைப்படங்களில் இன்றளவும் அவர் நடித்து வருகின்றார்.
கடந்த 41 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் அவர் நடிகராக பயணித்து வரும் அதே நேரம் பத்திரிகை நிருபராகவும் அவர் பயணித்து வந்தார். பின் அரசியல் மற்றும் சினிமா விமர்சகராவும் செயலாற்றி வருகிறார். பயில்வான் ரங்கநாதன் என்று கூறினாலே சர்ச்சை தான் என்று கூறும் அளவிற்கு அவர் வெளியிடும் கருத்துக்களால் இணையவாசிகள் மத்தியில் பெரும் வெறுப்பை சம்பாதித்தார்.
திரைத்துறையிலும் பலரின் கோபத்துக்கு தொடர்ச்சியாக உள்ளாகி வருவது அனைவரும் அறிந்ததே. சில மாதங்களுக்கு முன்பு பிரபல நடிகை சகிலா பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பயில்வான் ரங்கநாதனிடம் அவருடைய மகள் ஒரு லெஸ்பியன், இதை ஏன் அவர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என்று ஷகிலா கேட்டார்.
உடனே கோபத்தின் உச்சிக்கே சென்ற ரங்கநாதன், "இப்படி பேச வேண்டாம் உங்கள் நாக்கு அழுகிவிடும்", என்று வெறுப்போடு பேசியது அனைவரும் அறிந்ததே. பிரபல பின்னணி பாடகி சுசித்ரா அவர்கள் கூட அண்மையில் பயில்வான் ரங்கநாதன் குறித்த அவதூறுகளை பரப்பிய நிலையில் அதற்கும் பயில்வான் ரங்கநாதன் பதில் அளித்தார்.
இந்நிலையில் தற்பொழுது அவரது வீட்டில் எளிமையான முறையில் அவரது மகளுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ரங்கநாதன் தனது சமூக வலைதள பக்கங்களிலும் இன்னும் அந்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை என்றாலும் கிடைக்கப்பெற்றுள்ள சில ஆதாரங்களின் மூலம் அவருடைய மகளுக்கு நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் நடந்து முடிந்து உள்ளது என்றும், பல பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.