
தமிழ் சினிமா முன்னணி வலம் வருபவர் விஷால். தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரின் மேனேஜர் ஹரி கிருஷ்ணன் தக்க நேரத்தில், விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உதவி செய்துள்ளது... பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
நடிகர் விஷாலின் மேனேஜர் ஹரி கிருஷ்ணன், தன்னுடைய நண்பர்களுடன் புதுச்சேரி விஷால் மக்கள் நல இயக்கத்தின் தலைவரின் மகனின் பிறந்த நாளுக்காக சென்று விட்டு சென்னை திரும்பி கொண்டிருந்தார். அவர் மகாபலிபுரம் அருகே வந்த போது, கோர விபத்து ஒன்று நேர்ந்துள்ளது. ஒரு பேருந்தில் இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானதில், கணவன் - மனைவி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற அனைவரும், அவர்களை கண்டு கொள்ளாமல் கடந்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தை பார்த்த உடன், ரத்தம் சொட்ட சொட்ட கிடந்தவர்களை தன்னுடைய காரில் அழைத்துச் சென்று மகாபலிபுரம் அருகே உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். அங்கிருந்த மருத்துவர்கள் இது பெரிய விபத்து, இங்கு சிகிச்சை பார்க்க வசதிகள் இல்லை என கூறி அவர்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வலியுறுத்தினர். ஆனால் விஷால் மேனேஜர் ஹரி கிருஷ்ணன் மருத்துவர்களிடம் சண்டையிட்டு உடனடியாக விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் உதவி அளிக்க முயற்சி செய்து விபத்தில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.
மேலும் செய்திகள்: Nayanthara: நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தைகளின் வாடகை தாய் யார் தெரியுமா ? வெளியான பரபரப்பு தகவல்..!
அது மட்டுமல்லாமல் மற்ற கார் மற்றும் பேருந்தில் இருந்தவர்களையும் தனது நண்பர்களை வைத்து அந்த வழியாக வந்த வாகனங்களின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றியுள்ளனர். கண்ணெதிரே நடக்கும் பல விபத்துகளை கண்டும் காணாமல் செல்லும் மக்கள் மத்தியில் நடிகர் விஷால் மேனேஜர் ஹரி கிருஷ்ணன் இந்த செயல் பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
மேலும் செய்திகள்:Sneha Birthday: தூங்கி எழுந்த முகம்... மழை... வானவில்லை ரசித்தபடி இயற்கையோடு பிறந்தநாள் கொண்டாடும் சினேகா!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.