பிரபல நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு திடீர் அறுவை சிகிச்சை..! என்ன ஆச்சு.?

Published : Nov 03, 2021, 04:44 PM IST
பிரபல நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு திடீர் அறுவை சிகிச்சை..! என்ன ஆச்சு.?

சுருக்கம்

பிரபல நடிகரும், அரசியல் வாதியுமான நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு (Nadamuri Balakrishna) திங்கள்கிழமை வலது தோள்பட்டையில் கடுமையான வலி ஏற்பட்டதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.  

பிரபல நடிகரும், அரசியல் வாதியுமான நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு திங்கள்கிழமை வலது தோள்பட்டையில் கடுமையான வலி ஏற்பட்டதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: Priyanka Mohan: ஸ்டக்ச்சர் நச்சு தெரியும்... டைட் உடையில் ஹார்ட் பீட்டை எகிறவிடும் பிரியங்கா மோகன்!

அக்டோபர் 31 ஆம் தேதி அன்று, பாலகிருஷ்ணா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரகுவீர் ரெட்டி உட்பட எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு நான்கு மணி நேரம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது. அவர் இப்போது நன்றாக நலமுடன் இருப்பதாகவும், செவ்வாய் இரவு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகே இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தகவல் வெளியாகியது.

61 வயதிலும் தொடர்ந்து, அதிரடி ஆக்ஷன் படங்களை தேர்வு செய்து ரிஸ்க் எடுக்கும் காட்சிகளில் கூட அசால்டாக நடித்து வருபவர் பாலகிருஷ்ணா. இவருக்கு படப்பிடிப்பு போது தான் தோல் பட்டையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சில நாட்களாகவே தோள்பட்டை வலியால் அவதிப்பட்டுவந்த இவருக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஒருவழியாக தன்னுடைய படத்தின் படப்பிடிப்பை முடித்து கொடுத்த பின்னரே... அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: Subaskaran Allirajah: பாரம்பரிய உடையில் மனைவியுடன் ராமேஸ்வரத்திற்கு வந்து சுவாமி தரிசனம் செய்த சுபாஸ்கரன்!

 

மேலும் செய்திகள்: Vanitha Vijayakumar: கொட்டோ கொட்டுனு கொட்டும் துட்டு... துணிந்து புதிய தொழிலில் இறங்கி கெத்து காட்டும் வனிதா!

மேலும் படப்பிடிப்பில் அடிபட்ட பின்னர் "அவர் வலியைக் கட்டுப்படுத்த வலி நிவாரணி, ஊசி மற்றும் மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார்.  பின்னர் தோல் பட்டை சவ்வில் ஏற்பட்ட இந்த பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை மட்டுமே நிரந்தர தீர்வு என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என தெரிகிறது. சமீபத்தில் பிரபல கன்னட நடிகர் புனீத் ராஜ் குமாரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த 'பாலகிருஷ்ணா' தலையில் அடித்து கொண்டு அழுதது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Malavika Mohanan : பார்த்தாலே கிக்!! இறக்கமான சுடிதாரில் மாளவிகா மோகனின் நச் போஸ்..
Karuppu Pulsar: லப்பர் பந்து ஹிட்-க்கு பின் தினேஷின் 'கருப்பு பல்சர்' - எதிர்பார்ப்பை எகிற வைத்த டிரெய்லர்!