Gautham Menon 'அன்புசெல்வன்' குறித்து வெளியான தகவல்.. பதறி அடித்து கொண்டு ட்வீட் போட்ட இயக்குனர் கெளதம் மேனன்!

Published : Nov 03, 2021, 02:41 PM IST
Gautham Menon 'அன்புசெல்வன்' குறித்து வெளியான தகவல்.. பதறி அடித்து கொண்டு ட்வீட் போட்ட இயக்குனர் கெளதம் மேனன்!

சுருக்கம்

'அன்புச்செல்வன்' (AnbuSelvan Movie) என்கிற படத்தில், போலீஸ் அதிகாரி கெட்டப்பில் இயக்குனர் கெளதம் மேனன் (Gautham Menon) நடிக்க உள்ளதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியான நிலையில், இதற்க்கு பதறி அடித்து கொண்டு பதிலளித்துள்ளார் இயக்குனர் கெளதம் மேனன்.  

'அன்புச்செல்வன்' என்கிற படத்தில், போலீஸ் அதிகாரி கெட்டப்பில் இயக்குனர் கெளதம் மேனன் நடிக்க உள்ளதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியான நிலையில், இதற்க்கு பதறி அடித்து கொண்டு பதிலளித்துள்ளார் இயக்குனர் கெளதம் மேனன்.

தமிழ் சினிமாவில், வித்தியாசமான காதல் கதைகளை இயக்கி இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்த இயக்குனராக உள்ளவர் கெளதம் வாசுதேவ் மேனன். 'மின்னலே' படத்தில் துவங்கி, இவர் இயக்கத்தில் வெளியான 'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு', 'வாரணம் ஆயிரம்', 'விண்ணை தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' மற்றும் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' வரை பெரும்பாலான படங்கள் அழகிய காதலை வெளிக்கொணரும் விதமாகவே இருப்பவை. கூடவே சில செண்டிமெண்ட், மசாலா, ஆக்ஷன் என எதற்கும் குறைவில்லாமல் படத்தை நிறைவாக இயக்கி இருப்பார்.

மேலும் செய்திகள்: Subaskaran Allirajah: பாரம்பரிய உடையில் மனைவியுடன் ராமேஸ்வரத்திற்கு வந்து சுவாமி தரிசனம் செய்த சுபாஸ்கரன்!

சமீப காலமாக திரைப்பட இயக்கம் மட்டும் இன்றி, தயாரிப்பு, மற்றும் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், இவர் நடித்த படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் 'அன்புச்செல்வன்' என்கிற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக, சமூக வலைத்தளத்தில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வைரலாக பரவியது. ஏற்கனவே நடிகர் சூர்யா - ஜோதிகாவை வைத்து, இயக்குனர் கெளதம் மேனன் கடந்த 2003 ஆம் ஆண்டு இயக்கிய 'காக்க காக்க' படத்தில் சூர்யா அன்புச்செல்வன் என்கிற கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பார்.

மேலும் செய்திகள்: Vanitha Vijayakumar: கொட்டோ கொட்டுனு கொட்டும் துட்டு... துணிந்து புதிய தொழிலில் இறங்கி கெத்து காட்டும் வனிதா!

 

எனவே இந்த படம் 'காக்கா காக்கா' படத்தின் இரண்டாம் பாகமாக எடுக்கப்பட உள்ளதா? என்கிற சந்தேகம் எழுந்தது. இந்த படத்தில், கெளதம் மேனனே ஹீரோவாக களம் இறங்கும்படி இந்த போஸ்டர் இருந்ததால், ரசிகர்கள் மட்டும் இன்றி, பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவிக்க துவங்கினர். பின்னர் இந்த படத்தின் போஸ்டர் குறித்து, தகவல் தெரிய வரவே... பதறி அடித்து கொண்டு இதற்க்கு பதில் கொடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்: 'அண்ணாத்த' கிட்ட இருந்து எனிமிய காப்பாத்துப்பா... திருப்பதி ஏழுமலையானிடம் சரண்டர் ஆன விஷால்! வைரல் போட்டோஸ்!

 

இது குறித்து கௌதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, இந்த படத்தின் இயக்குனர் யார் என்று தனக்கு தெரியாது என்றும், அவரை நேரில் கூட பார்த்ததில்லை என்றும் கூறி ரசிகர்களுக்கு மட்டும் அல்ல அந்த போஸ்ட் உண்மையானது என, வாழ்த்து தெரிவித்த பிரபலங்களுக்கும் ஷாக் கொடுத்துள்ளார். இதன் மூலம் 'அன்புச்செல்வன்' என்கிற படமே உருவாக வில்லை என்பதும், யாரோ ஒருவர் இப்படி ஒரு போஸ்டரை வெளியிட்டு கொளுத்தி போட்ட தீ சமூக வலைத்தளத்தில் கொழுந்து விட்டு எரிந்தது என்பது தெரியவந்துள்ளது.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Malavika Mohanan : பார்த்தாலே கிக்!! இறக்கமான சுடிதாரில் மாளவிகா மோகனின் நச் போஸ்..
Karuppu Pulsar: லப்பர் பந்து ஹிட்-க்கு பின் தினேஷின் 'கருப்பு பல்சர்' - எதிர்பார்ப்பை எகிற வைத்த டிரெய்லர்!