டாக்டர் இயக்குனருடன் மீண்டும் வெளிநாடு புறப்படும் தளபதி .... பீஸ்ட் படம் குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்

manimegalai a   | Asianet News
Published : Nov 03, 2021, 12:52 PM ISTUpdated : Nov 03, 2021, 01:04 PM IST
டாக்டர் இயக்குனருடன் மீண்டும் வெளிநாடு புறப்படும் தளபதி ....  பீஸ்ட் படம் குறித்து வெளியான சுவாரஸ்ய  தகவல்

சுருக்கம்

பிரமாண்ட சண்டைக்காட்சியை படமாக்க நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படக்குழுவினர் மீண்டும்  ஜார்ஜியா செல்ல உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் திரைப்படம் பீஸ்ட். இயக்குனர் நெல்சனின் முந்தைய படைப்பான "கோலமாவு கோகிலா" நயன்தாராவின் புதிய பரிமாணத்தில் நாயகி சார்ந்த கதைக்களமாக மக்கள் மனதில் பதிந்த திரைப்படம். இதையடுத்துகோலமாவு கோகிலா" படத்திலிருந்து வெளியாகி மேக ஹிட் அடித்த  "கல்யாண வயசு தான்"  பாடல் மூலம் படலாசியராக உருமாறிய நடிகர் சிவகார்த்திகேயனை நாயனாக கொண்டு நெல்சன் உருவாக்கிய "டாக்டர்" 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்து வருகிறது. 

இரண்டு மெகா ஹிட் படங்களை அடுத்து தளபதி விஜயுடன்  பீஸ்ட் படத்தில் கமிட் ஆகியுள்ளார் நெல்சன். இவரின் நகைச்சுவை கலந்த ஆக்சன் கதைக்களம் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ள நிலையில்,விஜயுடன் நெல்சன் இணைந்துள்ள பீஸ்ட் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது என்றே சொல்லலாம். மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து  விஜய் நடிக்கும் இந்த படத்தில்  பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்துள்ளார்கள். 

கோலமாவு கோகிலா, டாக்டர் படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் அனிரூத்  தான்  நெல்சனின் அடுத்த படைப்பான பீஸ்ட் திரைப்படத்திற்கும் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பான இந்த படம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் நெல்சன் முந்தைய படங்களின் கதைக்களங்கள் போலல்லாமல் மாறுபட்ட பரிமாணத்தில் பீஸ்ட் இருக்குமென கூறியிருந்தது படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் தூண்டியுள்ளது.

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு  கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி ஜார்ஜியாவிற்கு சென்றிருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக படப்பிடிப்பை பாதியில் நிறுத்தி விட்டு படக்குழுவினர் சென்னை திரும்பினார்கள். பின்னர் சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில்  பிரமாண்ட செட்டுடன்  75 சதவீத படப்பிடிப்பை முடித்துள்ள பீஸ்ட் படக்குழுவினர் தற்போது சண்டை காட்சியை படமாக மீண்டு ஜார்ஜியா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் 10 நாட்கள் படப்பிடிப்பை தொடர்ந்து விரைவில் ஜார்ஜியாவுக்கு படக்குழு புறப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே இந்த படத்தின் கதை களம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வலைதளத்தில் உலா வந்த வண்ணம் உள்ளது. அதன்படி ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2012-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற விஜயின் துப்பாக்கி திரைப்படம் போலவே தீவிரவாதிகளிடமிருந்து மக்களை காக்கும் நாயனாக விஜய் பீஸ்ட் படத்தில் அதிரடி காட்டுவார் என சொல்லப்படுகிறது.  இந்நிலையில் அடுத்த கோடை விடுமுறை விருந்தாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் பீஸ்ட் திரைப்படத்திற்காக ஜார்ஜியாவில் உருவாகவுள்ள  சண்டை காட்சியுடன் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Chatha Pacha: மலையாளத்தில் அதிரடி வெற்றி... தமிழில் களம் இறங்கும் 'சத்தா பச்சா' - டிரெய்லர் ரிலீஸ்!
Dhanush Son: மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பயந்த தனுஷ் மகன் லிங்கா? ரஜினி பேரனை அப்செட் ஆக்கிய சமூக வலைதள கிண்டல்கள்?!