சூர்யா பிள்ளைகள் தலை நிமிர்ந்து சொல்லலாம்.. 'ஜெய் பீம்' அப்படி ஓர் படைப்பு ! - இயக்குநர் தங்கர் பச்சான்!

By manimegalai aFirst Published Nov 2, 2021, 9:05 PM IST
Highlights

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் இன்று வெளியா 'ஜெய்பீம்' படத்திற்கு தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், இயக்குனர் தங்கர் பச்சான் தன்னுடைய வாழ்த்துக்களை படக்குழுவினருக்கு தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் இன்று வெளியா 'ஜெய்பீம்' படத்திற்கு தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், இயக்குனர் தங்கர் பச்சான் தன்னுடைய வாழ்த்துக்களை படக்குழுவினருக்கு தெரிவித்துள்ளார்.

இருளர் சமூதாய மக்களின் வாழ்க்கையையும், அவர்களுக்கு அரங்கேறிய அநீதியையும் அடிப்படையாக கொண்டு உண்மை கதையை, கண் முன் நிறுத்தியுள்ள திரைப்படம் 'ஜெய்பீம்'.  இன்று ஓடிடி  அமேசான் பிரைமில் வெளியான இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில், ரஜிஷா விஜயன், லியோ மோல் ஜோஸ், மணிகண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2டி என்டர்டைன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடும்  வழக்கறிஞராக நடிகர் சூர்யா நடித்துள்ளார்.

இந்த படத்தை பார்த்துவிட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் முதல், கமல்ஹாசன், பா ரஞ்சித், இயக்குனர் பாண்டிராஜ் என அடுத்தடுத்து பல பிரபலங்கள் இந்த படத்தின் கதையையும், இந்த படத்தின் நாயகன் வழக்கறிஞர் சந்துரு. மற்றும் சந்துரு கதாபாத்திரமாகவே வாழ்ந்து தரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள நடிகர் சூர்யாவையும், படக்குழுவினரையும் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

பொதுவாகவே, சமூக கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக கூறி வரும் நடிகர் சூர்யாவின் அசல் பிரதிபலிப்பு, ஆக்ரோஷம் இந்த படத்தில் பிரதி பலிக்கிறது. அதே போல் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை என ஒவ்வொன்றிலும் காட்சிகளும், இசையும் பேசுகிறது போல் உணர்வு பூர்வமாக உள்ளது என பாராட்டுக்கள்
தொழில்நுட்ப கலைஞர்கள்  மற்றும் இசையமைப்பாளர்களுக்கும் குவிந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு, பிரபல தேசிய விருது ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான தங்கர் பச்சான் கூறியுள்ளதாவது...  ‘ஜெய் பீம்’ திரைப்படம் மூடிக்கிடந்த கல்மனங்களை எல்லாம் பேச வைத்திருக்கிறது.எத்தனையோ பேர் சட்டங்களைப்படித்தாலும் அண்ணன்  சந்துரு போன்ற ஒரு சிலர் தான் வாழ்வு முழுதும் உயிர்வாழ்வதற்கே போராடும் ஒடுக்கப்பட்ட குரலற்ற மக்களுக்காக அதை பயன்படுத்துகின்றனர்! இத்திரைப்படம் மக்களின் விடுதலைக்கான கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.காவல்துறை உயர் அதிகாரிகளின் அதிகார அழுத்தங்களால் ராசாக்கண்ணு போன்ற அப்பாவி மக்களின் வாழ்வு பறிபோவது இனியாவது நிறுத்தப்பட வேண்டும்.

நான் அன்று சொன்னதை சூர்யா இப்பொழுது புரிந்திருப்பார் என நினைக்கிறேன். அவருடைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இத்திரைப்படத்தை தலை நிமிர்ந்து தங்கள் தலைமுறையினரிடம் பெருமையுடன் கூறிக்கொள்வார்கள். இவரைப்போன்றே பெரு முதலீடு படங்களில் மட்டுமே நடிக்கும் மற்ற நடிகர்களும் மனது வைத்தால் இச்சமூகத்திற்கு தேவையான இது போன்ற சிறந்த படைப்புக்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

மக்களால் கொண்டாடப்படும் இத்திரைப்படத்தை சட்டம்-நீதி-காவல் துறையில் உள்ளவர்கள் கட்டாயம் காண வேண்டும்.கலை மக்களுக்கானது!அதை ‘ஜெய் பீம்’ சாதித்திருக்கிறது!!

என தம்பி சூர்யா,இயக்குநர் ஞானவேல்,அரங்கக்கலை இயக்குநர் கதிர்  மற்றும் இத்திரைப்பட நடிப்புக்கலைஞர்கள்,தொழில்நுட்பக்கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துகளும். என தெரிவித்துள்ளார்.

click me!