நீங்கள் வங்கியில் லாக்கரை வைத்திருக்கிறீர்களா? ஆர்.பி.ஐ விதித்த அதிரடி விதிமுறைகள் - என்னென்ன தெரியுமா?

By Raghupati R  |  First Published Sep 26, 2022, 9:40 PM IST

வங்கி லாக்கர் தொடர்பான விதிகளை ரிசர்வ் வங்கி தற்போது மாற்றியுள்ளது.


வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை கருத்தில் கொண்டு இந்திய ரிசர்வ் வங்கியானது  தற்போது (ஆர்பிஐ) விதிகளை மாற்றியுள்ளது. நீங்கள் ஏதேனும் ஒரு வங்கியில் லாக்கரை எடுத்து அதில் தங்கம் மற்றும் வெள்ளி அல்லது மற்ற மதிப்புமிக்க பொருட்களை வைத்திருந்தால் கண்டிப்பாக இந்த செய்தியை படியுங்கள்.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வங்கியில் லாக்கர் எடுக்கும் வாடிக்கையாளர்களின் புகாரின் பேரில் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) விதிமுறைகளை மாற்றியுள்ளது. வங்கி லாக்கர்களில் திருடு போவதாக வாடிக்கையாளர்கள் தரப்பில் அடிக்கடி புகார்கள் வருகின்றன. ஆனால் இப்போது லாக்கரில் இருந்து ஏதாவது திருடப்பட்டால், வாடிக்கையாளருக்கு சம்பந்தப்பட்ட வங்கியில் இருந்து லாக்கரின் வாடகையை விட 100 மடங்கு வரை இழப்பீடு வழங்கப்படும்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..வீட்டு காவலில் சீனா அதிபர் ஜி ஜின்பிங்.. ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் - உண்மையில் சீனாவில் என்ன நடக்கிறது ?

உண்மையில், திருட்டு சம்பவத்தில் இருந்து வங்கிகள் தப்பித்துக்கொள்வது பல முறை காணப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவில், வங்கிகள் காலி லாக்கர்களின் பட்டியல், லாக்கருக்கான காத்திருப்பு பட்டியல் எண் ஆகியவற்றை காட்சிக்கு வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது லாக்கர் அமைப்பில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் என்று கூறப்படுகிறது.  ஒரே நேரத்தில் அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு லாக்கரை வாடகைக்கு எடுக்கலாம்.  

நீங்கள் லாக்கரை எடுக்கும் போது, அது வங்கி மூலம் மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் உங்களுக்கு எச்சரிக்கை செய்யப்படும். எந்த வித மோசடியில் இருந்தும் பாதுகாக்க ரிசர்வ் வங்கி இந்த விதியை வகுத்துள்ளது. லாக்கர் வாடகையை அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரே நேரத்தில் எடுக்க வங்கிகளுக்கு உரிமை உண்டு. லாக்கரின் வாடகை ரூ. 2000 என்றால், மற்ற பராமரிப்புக் கட்டணங்கள் தவிர்த்து, ரூ.6000க்கு மேல் வங்கி வசூலிக்க முடியாது.

இதையும் படிங்க..‘சட்ட ஒழுங்கு சீர்கேடு : முதல்வர் தான் காரணம்.. அவங்க கூட ஸ்டாலின் கூட்டு’ - கடுப்பான அர்ஜுன் சம்பத்.!

மேலும் சிசிடிவி கேமரா மூலம் லாக்கர் அறைக்கு வருபவர்கள், செல்வோர்களை கண்காணிக்க வேண்டியது அவசியம் ஆகும். இது தவிர 180 நாட்கள் சிசிடிவி காட்சிகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும். திருட்டு அல்லது வேறு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் விசாரிக்க முடியும்’ என்றும் கூறியுள்ளது.

இதையும் படிங்க..புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் ஆட்சி கவிழ்கிறது ? உள்ளடியில் பாஜக - அடுத்த முதல்வர் யார் ?

click me!