ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி மீது வரும் நவம்பர் 17ம் தேதிவரை கறுப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று மும்பை உயர் நீதிமன்றம் வருமானவரித்துறைக்கு இன்று உத்தரவிட்டது.
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி மீது வரும் நவம்பர் 17ம் தேதிவரை கறுப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று மும்பை உயர் நீதிமன்றம் வருமானவரித்துறைக்கு இன்று உத்தரவிட்டது.
ஸ்விங் வங்கியில் இரு கணக்குகளில் ரூ.814 கோடி டெபாசிட் செய்து அதன் மூலம் ரூ.420 கோடி வரி செய்தது தொடர்பாக அனில் அம்பானிக்கு கடந்தஆகஸ்ட் 8ம் தேதி வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
ராஜீவ் கொலை வழக்கு: நளினி மனுவுக்கு பதில் அளி்க்க மத்திய அரசு, தமிழக அரசுக்கு நோட்டீஸ்
அனில் அம்பானி, தெரிந்தே வரிஏய்ப்பு செய்துள்ளார். உள்நோக்கத்துடனே வெளிநாட்டு வங்கிக்கணக்குகளையும், நிதி ஆதாரங்களையும் மறைத்துள்ளார் என்று வருமானவரித்துறை குற்றம்சாட்டுகிறார்கள்
வருமானவரித்துறை நோட்டீஸின்படி, “ கறுப்புப்பணத் தடுப்புச் சட்டம் பிரிவு 50 மற்றும் 51ன் கீழ் விசாரிக்கப்பட வேண்டியவர். இந்த சட்டத்தின் கீழ் அனில் அம்பானி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டு சிறையும், அபராதமும் விதிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே கடந்த மாதம் மும்பை உயர் நீதிமன்றத்தில் அனில் அம்பானி தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கறுப்புப்பண தடுப்புச் சட்டம் 2015ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஆனால், 2006-2007ம் ஆண்டு 2010-2011ம் ஆண்டுதான் இந்த பரிமாற்றம் நடந்துள்ளதால் எவ்வாறு அந்தச்சட்டத்தைப் பயன்படுத்த முடியும் என்று வாதிடப்பட்டது.
டெல்லியில்12 வயது சிறுவன் பலாத்காரம், உறுப்புகள் சிதைப்பு:குழந்தைகளைக காக்க டிப்ஸ்
இந்த மனு மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.வி.கானபுர்வாலா மற்றும் ஆர்என்லத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமானவரித்துறை வழக்கறிஞர் அகிலேஷ்வர் ஷர்மா பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் கோரியதையடுத்து வழக்கை நவம்பர் 17ம்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
அதுமட்டுமல்லாமல் அடுத்த விசாரணை வரும் வரும்வரை அனில் அம்பானி மீது கறுப்புப்பணச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை ஏதும் எடுக்கக்கூடாது, கறுப்புப்பண தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற அனில் அம்பானி வாதத்துக்கு பதில் அளிக்குமாறு வருமானவரித்துறைக்கும் நோட்டீஸ் அனுப்பி என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதிய கட்சியின் பெயரை அறிவித்தார் குலாம் நபி ஆசாத்: விரைவில் ஜம்மு காஷ்மீர் தேர்தல்
வருமானவரித்துறையின் நோட்டீஸின்படி, அனில் அம்பானி, பஹாமாஸ் தீவில் டைமண்ட் அறக்கட்டளையும், நார்த்தன் அட்லாண்டிக் டிரேடிங் லிமிட்ட்ந நிறுவனத்தையும் பிரிட்டிஷ் விர்ஜின் ஐலாந்தில் நடத்தி வருகிறார்.
இந்த கணக்குகளில் இருக்கும் பணம் குறித்து வருமானவரித்துறையிடம் அனில் அம்பானி ஐடிஆர் தாக்கலில் தெரிவிக்கவில்லை. இந்த இருகணக்குகளில் மொத்தம் ரூ.814 கோடி இருப்பு இருக்கிறது. இதில் ரூ.420 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.