Asianet News TamilAsianet News Tamil

ghulam nabi azad party: புதிய கட்சியின் பெயரை அறிவித்தார் குலாம் நபி ஆசாத்: விரைவில் ஜம்மு காஷ்மீர் தேர்தல்

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத், தனது புதிய கட்சியின் பெயரை இன்று அறிவித்தார். ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் புதிதாக கட்சியை ஆசாத் தொடங்கியுள்ளார்.

Ahead of the J-K polls, Ghulam Nabi Azad launches the new Party.
Author
First Published Sep 26, 2022, 3:10 PM IST

புதிய கட்சியின் பெயரை அறிவித்தார் குலாம் நபி ஆசாத்: விரைவில் ஜம்மு காஷ்மீர் தேர்தல்
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத், தனது புதிய கட்சியின் பெயரை இன்று அறிவித்தார்.

ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் புதிதாக கட்சியை ஆசாத் தொடங்கியுள்ளார்.


குலாம் நபி ஆசாத் கட்சியின் பெயர் “ஜனநாயக ஆசாத் கட்சி” என்று பெயரிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பல்வேறு பதவிகளிலும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும், மத்தியஅமைச்சராகவும், எம்.பி.யாகவும் இருந்தவர் குலாம் நபி ஆசாத். ஆனால், காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த மாதம் கட்சியிலிருந்து விலகுவதாக குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

மயங்கி விழாதிங்க!திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் சொத்து மதிப்பு என்ன? வெளியானது உண்மை தகவல்


விரைவில் புதிய கட்சி தொடங்கப்போவதாக தெரிவித்திருந்த குலாம் நபி ஆசாத் இன்று அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். குலாம் நபி ஆசாத் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 
நான் தொடங்கியிருக்கும் கட்சி மதச்சார்பற்றது, ஜனநாயகமானது, எந்தவிதமான தாக்கத்துக்கும் ஆட்படாத சுதந்திரமான கட்சி. எனது கட்சியின் பெயர்  “ஜனநாயக ஆசாத் கட்சி”. 


இதற்கான கொடியும் அறிமுகப்படுத்தப்படுகிறது. எங்கள் கட்சியின் கொடி, வெந்தய நிறம், நீலம், வெள்ளை கலந்திருக்கும். இதில் வெந்தய நிறம் வேற்றுமையில் ஒற்றுமை,புத்தாக்கம் ஆகியவற்றைக் குறிக்கும், வெள்ளை அமைதியையும், சுதந்திரம், கற்பனை ஆகியவற்றை நீல நிறம் குறிக்கும். 


என்னுடைய கட்சி பெயரைத் தீர்மானிக்க 1500 பெயர்கள் சமஸ்கிருதம், உருது மொழியில் வந்தன. இறுதியாக உருது, இந்தி கலப்பில் இந்துஸ்தானியில் பெயர் வைத்தேன். கட்சியின் பெயர் ஜனநாயகமாக, அமைதியானதாக, சுயாட்சியாக இருக்கவேண்டும். 

ராஜீவ் கொலை வழக்கு: நளினி மனுவுக்கு பதில் அளி்க்க மத்திய அரசு, தமிழக அரசுக்கு நோட்டீஸ்


நான் கட்சி தொடங்குவது குறித்து எந்தக் கட்சியுடனும் ஆலோசிக்கவில்லை. நான் காந்தியின் கொள்கையின் அடிப்படையில் கட்சி இருக்கும்  ” எனத் தெரிவித்தார்


முன்னதாக காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறியபின் ஜம்மு காஷ்மீருக்கு வந்த குலாம் நபி ஆசாத் அளித்த பேட்டியின்போது “ ஜம்மு காஷ்மீருக்கு முழுமையாக மாநில அந்தஸ்து கிடைக்க எனது புதிய கட்சி பாடுபடும். ஜம்மு காஷ்மீர் மக்கள்தான் எனது கட்சியின் பெயர், கொடியைக் கூற வேண்டும். நான் தீர்மானிக்கமாட்டேன்.

டெல்லியில்12 வயது சிறுவன் பலாத்காரம், உறுப்புகள் சிதைப்பு:குழந்தைகளைக காக்க டிப்ஸ்

இந்துஸ்தானி பெயர் வைப்பேன், அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 
மாநில அந்தஸ்து முழுமையாகக் கிடைக்க வைப்பது, நில உரிமை, பூர்வீகக் குடிகளுக்கு வேலைவாய்ப்பு ஆகியவற்றை வலியுறுத்துவேன்.”எனத் தெரிவித்திருந்தார்

Follow Us:
Download App:
  • android
  • ios