நல்ல மகசூல் எடுக்க கிழங்குகளை இப்படியும் தேர்வு செய்யலாம்…
1.. நல்ல மகசூல் எடுப்பதற்கு கிழங்கின் எடை 1.5 முதல் 2 கிலோ வரை இருக்கலாம்.
2.. கன்றுகள் நடவிற்கு தேர்வு செய்யும் போது, தாய்மரம் புசேரியம் மற்றும் வாடல் நோய், இலைக் கருங்கோடு, பூ மடல் தேமல், முடிக் கொத்து மற்றும் வெள்ளரித் தேமல் நோய்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.
3.. பக்க கன்றுகளை பிரித்தெடுத்தப்பின்பு கிழங்கிலிருந்து 15cm நீளமுள்ள தண்டை விட்டுவிட்டு, மீதிப்பகுதியை வெட்டி விட வேண்டும்.
4.. கிழங்கில் உள்ள மேற்தோல் மற்றும் வேர் ஆகியவற்றை நீக்கி விட வேண்டும்.
5.. கார்பென்டாசிம் 2gm/1lit நீர் மற்றும் மானோகுரோட்டாபாஸ் 14ml/1lit நீர் மருந்துகள் கலந்த கலவையில் 20-30 நிமிடங்கள் நனைத்து வைத்து 24 மணிநேரம் நிழலில் உலர்த்தி பின்பு நடவு செய்ய வேண்டும்.
6.. கார்போபியூரான் குருணை மருந்தை ஒரு கன்றுக்கு 40gm என்ற அளவில் களிமண் கரைசலில் மூழ்கி எடுத்த கிழ்ங்கு பாகத்தில் தூவியும் நடவு செய்யலாம்.