மண் புழு உரம் தயாரிக்கும்போது இவற்றில் எல்லாம் மிகுந்த கவனம் செலுத்தணும்...
1.. மண்புழு உரம்
மண் புழு உரம் என்பது, மண் புழுக்கள் வைக்கோல்,சானம் போன்ற இயற்கை இடு பொருட்களை உன்பதனால் வெளியேற்றும் கழிவுகளை மட்க செய்து கிடைக்கும் ஒரு எருவாகும்.
2.. மண்புழுக்களை தேர்வு செய்யம் முறை
** புழுக்கள் அதிகம் உள்ள மண்ணின் மேற்பரப்பைக் கண்டறிய வேண்டும்.
** 500 கிராம் வெல்லம் மற்றும் ஒரு கிலோ மாட்டுச்சாணம் ஆகிய இரண்டையும் 2 லிட்டர் தண்ணீரில் கரைத்து 1 மீ x 1 மீ பரப்பளவில் மண்ணின் மேல் தெளிக்க வேண்டும்.
** வைக்கோல் கொண்டு மூடிவிட்டு பின்பு அதன் மேல் கோணிப்பை வைத்து போர்த்த வேண்டும்.
** 20-30 நாட்களுக்கு தண்ணீர் தெளிக்க வேண்டும்.
** அந்த இடத்தில், மண்புழுக்கள் மேற்பரப்பில் அதிக அளவில் வரத்தொடங்கும். அவற்றை சேகரித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
3.. எரு குழி தயாரித்தல்
** எரு-குழிகளை நாம் நம் வசதிக்கேற்ப வீட்டின் பின்புறத்திலோ, தோட்டத்திலோ அமைக்கலாம்.
** செங்கற்கள் கொண்டு ஒரு குழி, இரு குழி அல்லது வசதிக்கேற்ற அளவிளான தொட்டிகள் அமைக்க வேண்டும்.
** தொட்டியினை முறையான நீர் வெளியேற்றக் குழாய்களுடன் அமைக்க வேண்டும்.
** வேளாண் கழிவுகள் மற்றும் இதர பொருட்களின் கொள்ளவைக் கொண்டு தொட்டிகளின் அளவை தீர்மானம் செய்ய வேண்டும்.
** தொட்டிகளின் சுவரின் நடுவில் சிறு குழிகளில் நீர் தேக்கம் செய்வதன் மூலம் புழுக்களை எறும்பு தாக்கத்தில் இருந்து காப்பாற்ற முடியும்.