கருப்பை வெளித்தள்ளுதல் பிரச்சனையால் அவதிபடும் மாடுகளைக் குணப்படுத்தும் வழிகள்….

Ways to heal the cows that cause hysterectomy.
Ways to heal the cows that cause hysterectomy.


கன்று ஈன்ற கறவை மாடுகளுக்கு கருப்பை வெளித்தள்ளுதல் சிக்கலை குணப்படுத்ஹ்த இந்த வழிமுறைகளைக் கையாள வேண்டும்.

கருப்பை வெளித்தள்ளுதல்:

கருப்பை வாய் தள்ளுதல், உறுப்புத் தள்ளுதல், அடி தள்ளுதல், சவுரி தள்ளுதல், நாய்த்தலை படுதல், சொவரொட்டி தள்ளுதல் எனப் பல்வேறு பெயர்களில் கருப்பை வெளித்தள்ளுதல் அழைக்கப்படுகிறது.

கருப்பை வெளித்தள்ளுதலுக்கு முக்கியக் காரணம் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் சில பசுக்களில் அதிக அளவில் சுரப்பதேயாகும். இதன் காரணமாக இடுப்புப் பகுதிச் சதைகள் மற்றும் கருப்பையின் பாகங்கள் தளர்ந்து போய்விடுகின்றன.

இந்த தளர்ச்சியின் காரணமாக முதலில் கருவறை சற்று வெளியே தெரிகிறது. இவ்வாறு வெளியே தள்ளப்பட்ட கருப்பையின் வாயை நுண்ணுயிரிகள் தாக்கும்போது இந்த மென்மையான உறுப்பிற்கு ஒருவித எரிச்சல் ஏற்படுகிறது. இந்த எரிச்சலின் காரணமாக கருப்பையானது மேலும் வெளித்தள்ளப்படுகிறது.

சிகிச்சைகள்:

வெளித்தள்ளப்பட்ட கருப்பையினை உடல்மட்டத்திற்குச் சிறிது மேலே தூக்கிப் பிடித்தால் சிறுநீர் வெளியேற வாய்ப்புண்டு. மேலும் இவ்வாறு செய்வதால் கருப்பை வீங்கிப்போவதையும் தடுக்கலாம்.

மருத்துவரிடம் கொண்டு செல்லும் வரையோ அல்லது மருத்துவர் வரும் வெளித்ள்ளப்பட்ட கருப்பையினை முடிந்த வரை ஈஇரத்தன்மையுடன் இருக்கச் செய்ய வேண்டும்.

அதற்குச் சுத்தமான ஈரத்துணியை கருப்பையின் மேலே போட்டு மூடிவைக்க வேண்டும். துணி காயக் காய சுத்தமான குளிர்ந்த நீரினை ஊற்ற வேண்டும்.

தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரல்லாத மற்ற நபர்களைக் கொண்டு வெளித்தள்ளப்பட்ட உறுப்புக்களை மீண்டும் உள்ளே தள்ள முயற்சிக்கக் கூடாது.

கையால் அமுக்கவோ, அடிக்கடி கருப்பையினைத் தொட்டுப் பார்ப்பதோ கூடாது.கூடுமான வரையில் மாடு முக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு மாட்டிற்கு ஏதாவது உண்ணக் கொடுத்தோ அல்லது சிறிதளவு சமையல் உப்பினை மாட்டின் நாக்கில் தேய்த்துவிட்டோ மாடு அசைபோடும்படி செய்தால் மாடு முக்காமல் இருக்கும்.

மாட்டின் கீழ்தாடையில் வைக்கோல் பிரி அல்லது கயிற்றினைக் கட்டி விட்டாலும் மாடு அசைபோட்டுக் கொண்டு முக்காமல் இருக்கும்.

இக்கருப்பை வெளித்தள்ளுதல் தாது உப்புகள் மற்றும் சத்துக்கள் குறைவினாலும் ஏற்படும். ஆகவே சினைக்காலத்தில் பசும்புல் அளிப்பது அவசியம்.

நிறை சினைக் காலத்தில் மாடுகளுக்குத் தீவனத்தினை ஒரே வேளையில் அதிக அளவு அளிக்காமல் மூன்று, நான்கு பகுதியாகப் பிரித்து கொடுக்க வேண்டும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios