பேயெள் சாகுபடி முறைகள் குறித்த பார்வை…
கிருஷ்ணகிரி மாவட்டம், கர்நாடக எல்லையை ஒட்டியுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் ஊடுபயிராக பேயெள் பயிர் செய்யப்படுகிறது.
பேயெள்ளு என்பது பார்ப்பதற்கு சூரியகாந்திப்பூ மாதிரியே இருக்கும்.
பூக்கள் சிறியதாக இருக்கும். பூவுக்குள் தான் விதை இருக்கும். விதைப்புக்கு ஆடிப்பட்டம் ஏற்றது. விதைக்கும் போது நிலத்தை 2 சால் உழவு செய்து, 1 சென்டுக்கு 100 கிராம் விதையை அரை கிலோ மணலோடு கலந்து நெருக்கமாக விதைப்பு செய்யனும்.
ஒரு ஏக்கருக்கு 5 கிலோ விதை தேவைப்படும். முளைப்பு வந்த பிறகு ஒருமுறை களை எடுக்க வேண்டும். தொடர்ந்து 20 நாட்களுக்கு மழை இல்லாவிட்டாலும் தாக்கு பிடிக்கும். 20-25 நாட்களுக்கு ஒரு தண்ணீர் கொடுத்தாக் கூட போதும். நல்ல மழை கிடைச்சு நிலத்தில் ஈரம் இருந்தால் நிறைய இலைகள் விட்டு அதிக மகசூல் எடுக்க முடியும்.
180 நாட்களில் அறுவடைக்கு வந்து விடும். செடியோட அடிப்பகுதியை விட்டு விட்டு அறுவடை செய்து 4 நாட்கள் காயவைத்து கையில் தட்டி எள்ளை பிரித்தெடுக்கலாம். நல்லெண்ணெய், விளக்கெண்ணெயை விட கூடுதல் மருத்துவ குணம் நிறைந்தது. பேயெள் எண்ணெய் சில ஆண்டுகளுக்கு முன் பையூர் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம் “பையூர்’ என்ற பேயெள் ரகத்தை வெளியிட்டது.
விதை 1 கிலோ ரூபாய் 50 என்ற விலையில் கிடைக்கிறது.