வேலூர் மாவட்ட விவசாயிகள் மூலிகைப் பயிரான கீழாநெல்லியை பயிரிட்டு வருவாய் ஈட்டலாம்.

கீழாநெல்லி இரத்த சோகை, ஆஸ்துமா, இருமல், மஞ்சள் காமலை, குடற்புண், சிறுநீர் கற்களை கரைய வைத்தல், சர்க்கரை, கொழுப்பை கட்டுப்படுத்துதலுக்கு பயன்படுத்தும் மூலிகைப் பயிராகும்.

வெப்பமண்டல பயிரான இதை வடிகால் வசதி கொண்ட நிலத்தில் பயிரிடலாம்.

இப்பயிரை ஆண்டு முழுவதும் பயிரிட முடியும்.

விதைகள் தூவி நாற்று வளர்த்து, பயிரிடுவது ஏற்றது.

25 நாள் நாற்றை 30*15 செ.மீ. இடைவெளியில் பார் அமைத்து நட வேண்டும்.

ஏக்கருக்கு அடியுரமாக 6 டன் தொழு உரத்தை கடைசி உழவில் இட வேண்டும். அத்துடன் புண்ணாக்கு கலவை 100 கிலோ இட வேண்டும்.

இரசாயன உரங்கள் இடுவதற்கு அவசியமில்லை.

3 மாத காலத்தில் அறுவடைக்கு தயாராகும்.

ஏக்கருக்கு 1000 கிலோ உலர்ந்த இலை கிடைக்கும்.

ஏக்கருக்கு ரூ.3500 செலவாகும். வரவு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரை கிடைக்கும்.