இந்த வழியைப் பயன்படுத்தி மஞ்சள் பயிரில் ஏற்படும் இரும்புச் சத்து குறைபாட்டைப் போக்கலாம்…

Using this method can lead to an iron deficiency in the yield of yellow ...
Using this method can lead to an iron deficiency in the yield of yellow ...


மஞ்சள் பயிரில் ஏற்படும் இரும்புச் சத்து குறைபாடு

இரும்புச் சத்து குறைபாடானது மணல் பாங்கான நிலங்கள், சுண்ணாம்புச் சத்து அதிகமுள்ள நிலங்கள், களர் உவர் நிலங்களில் அதிகமாகக் காணப்படும். இந்த சத்துக் குறைபாட்டால் புதியதாக வெளிவரும் துளிர்கள் வெளுத்து மஞ்சள் அல்லது வெள்ளை நிறமாக மாறிவிடும்.

இலைகளின் நரம்புகளுக்கு இடைப்பட்ட பகுதிகள் வெளிறியும், இலைகள் நரம்புகள் பச்சை நிறமாகவும் காணப்படும். இந்த குறைபாடு அதிகமுள்ள நிலங்களில் மஞ்சள் பயிரானது வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும்.

நிவர்த்தி முறை:

இரும்புச் சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய 0.5 சத இரும்பு சல்பேட் கரைசலை அதாவது, 5 கிராம் இரும்பு சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து மாலை நேரங்களில் இலைகளின் மீது நன்றாகபடும்படி தெளிக்க வேண்டும்.

இவ்வாறு 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். மேலும், அடுத்தமுறை பயிர் செய்யும்போது இத்தகைய குறைபாடு தோன்றுவதைத் தவிர்க்க ஹெக்டேருக்கு 30 கிலோ இரும்பு சல்பேட் உரத்தை அடியுரமாக இடவேண்டும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios