turmeric in this way can yield 50 percent higher yield ...
ஒரு ஏக்கருக்கு தேவையான நாற்றுக்களை உற்பத்தி செய்ய 500 கிலோ மஞ்சள் போதுமானது.
ஒரு ஏக்கருக்கு நடவு செய்ய 55,000 முதல் 60,000 நாற்றுகள் தேவைப்படுகிறது.
விதைக் கிழங்கினை பயன்படுத்தும்போது 80 சதவீதம்தான் முளைப்புத்திறன் இருக்கும். ஆனால் நாற்றுக்களை நடவிற்கு பயன்படுத்துவதால் 98 சதவீதம் பயிர்கள் முளைத்திருக்கும்.
நாறறுக்கள் நட்ட 2ம் மாதத்திலேயே கிழங்கு உருவாக ஆரம்பித்துவிடும்.
8-ஆம் மாதத்தில் நன்கு திரட்சியடைந்து 5 முதல் 6 தூர்கள் கொண்ட கிழங்குகள் அறுவடைக்கு தயாராகிவிடும்.
மிதமான அளவுக்கு நோய், பூச்சி தாக்குதல் இருக்கும். பொருளாதார சேத நிலையைத் தாண்டும்போது தகுந்த பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
விதைக்கிழங்கு பயிரிட்டு கிடைக்கும் மகசூலைவிட அதிகபட்சமாக 50 சதவீதம் வரை நாற்றுக்கள் நடுவதன் மூலம் பெறலாம்.
