இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...

This kind of turkey species are grown in India ...
This kind of turkey species are grown in India ...



இந்தியாவில் வளர்க்கப்படும் வான்கோழி இனங்கள்:

1.. அகன்ற மார்புடைய வெண்கல இனம்

இந்த இனத்தை சேர்ந்த வான்கோழிகளின் இறகுகள் வெண்கல நிறத்தில் இல்லாமல், கறுப்பு நிறத்தில் இருக்கும். 

பெட்டை வான்கோழிகளின் மார்பில் இறகுகள் கறுப்பு நிறத்தில் வெள்ளைநிற நுனியுடன் காணப்படும். 

இதனைக் கொண்டு சேவல் மற்றும் பெட்டைக்கோழிகளை சீக்கிரமாக, அதாவது 12 வார வயதிலேயே கண்டுபிடிக்கமுடியும்.

2. அகன்ற மார்புடைய வெள்ளை இனம்;

அகன்ற மார்புடைய வெள்ளை வகை 16 வாரத்தில், கோழிகள் 8 கிலோ எடையும், ஆண் வகைகள் 12 கிலோ எடையும்இருக்கும் பொழுது இறைச்சிக்காக விற்கப்படுகிறது.

உள்ளுர் சந்தையின் தேவைப்கேற்ப, குறுகிய வயதுடைய வான்கோழிகளை வெட்டி வறுப்பதற்கு பயன்படுத்தலாம்.

இந்த இனம், அகன்ற மார்புடைய வெண்கலம் மற்றும் வெள்ளைஇறகுகளையுடைய வெள்ளை ஹாலந்து வான்கோழிகளின் கலப்பு ஆகும். 

அதிக வெப்பத்தினைத் தாங்கக் கூடியதாகவும்  மற்றும் இறைச்சி சுத்தமாக இருப்பதாலும் வெள்ளை நிற இறகுகளுடைய வான்கோழிகள் இந்தியாவின் வேளாண்-சூழ்நிலைகளுக்கு ஏற்றவையாக கருதப்படுகின்றன.

3. பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை இனம்

இவ்வினம் அகன்ற மார்புடைய வெள்ளையின வான்கோழிகளின் நிறம் மற்றும்வடிவத்தை ஒத்ததாகவும், உருவத்தில்  அதை விட சிறியதாகவும்  இருக்கும். 

இவற்றின் முட்டை உற்பத்தித்திறன், முட்டை பொரிக்கும் மற்றும் கருவுறும் திறன் மற்ற இனங்களை விட அதிகம். இவற்றின் அடைகாக்கும் காலம் மற்ற இனங்களை விட குறைவாக இருக்கும்.

4. நந்தனம் வான்கோழி 1

இது கருப்பின நாட்டு வான்கோழியும் பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளைவான்கோழி இனமும் சேர்ந்த கலப்பினம்.  இது தமிழக சீதோஷ்ண நிலைக்குஏற்றது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios