Asianet News TamilAsianet News Tamil

இவைதான் நம் நாட்டில் பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்த தீவனப் பொருட்கள்…

these are-the-fodder-of-our-country-had-been-used-in-th
Author
First Published Jan 11, 2017, 1:39 PM IST


பாரம்பரிய முறையில் கோழிகளுக்கு தானியப் பயிர்களான அரிசி, சோளம், கோதுமை, ஓட், பார்லே போன்றவையும் மற்றும் உபதானியப் பொருட்களான நெல் / கோதுமை, உமி, தவிடு போன்றவைகளையும் தீனியாகக் கொடுக்கலாம்.

மேலும் விலங்கு, காய்கறிப் புரதங்களான மீன் தோல்க்கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், சோயாபீன் எண்ணெய்க் கழிவுகள், கடலை மற்றும் எள்ளுப் புண்ணாக்கு போன்றவற்றையும் கோழித்தீவனமாகப் பயன்படுத்தலாம்.

இதோடு தாதுக்களும் விட்டமின்களும் கலந்து சரிவிகித உணவாகக் கொடுத்தல் வேண்டும்.

கீழ்க்காணும் தீவனப் பொருட்கள் நம் நாட்டில் பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

1.. சோளம்

இதில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் செரித்தல் எளிதாகிறது. குறைந்தளவு புரதமும், அதிக ஆற்றலும் கொண்டது. லைசின், சல்ஃபர் அமினோ அமிலங்களைப் பெற்றுள்ளது. மஞ்சள் நிறச் சோளத்தில் விட்டமின் மற்றும் சோன்த்தோடஃபில்  நிறமி நிறைந்துள்ளது. இந்த நிறமிகள் தான் சிலவகைப் பறவைகளின் மஞ்சள் தோலிற்குக் காரணம்.

2.. பார்லே

இதில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால் 15 சதவிகிதத்திற்கு மேல் தீவனத்தில் சேர்க்கக்கூடாது.

3.. ஓட்ஸ்

ஓட்ஸிலும் நார்ச்சத்து அதிகமிருப்பதால் 20 சதவிகிதம அளவே சேர்க்கவேண்டும். இதில் மாங்கனீசு சத்து அதிகம் இருப்பதால் கோழிகளில் வரும், கால் பிரச்சினை, இறகை பிடுங்கிக் கொள்ளுதல் மற்றும் தன்னின ஊன் ஊன்றுதல் போன்ற குறைபாடுகளைக் குறைக்க முடியும்.

4.. கோதுமை

சோளத்திற்குப் பதில் அதிக ஆற்றல் அளிக்க கோதுமை பயன்படுகிறது.

5.. கோதுமை தவிடு

இது மாங்கனீஸ் பாஸ்பரசுடன் சிறிது நார்ச்சத்தும் மிகுந்துள்ளது.

6.. கம்பு

கோதுமை போலவே நல்ல ஆற்றல் வழங்கியாக இது செயல்படுகிறது.

7.அரிசி

உடைந்த அரிசி குருணைகள் ஆற்றல் அதிகம் பெற்றுள்ளது. கார்போஹைட்ரரேட் மிகுந்துள்ளது.

8.. பாலிஸ் செய்யப்பட்ட அரிசி

இது ஒரு சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவாகையால் 50 சதவிகிதம் வரை தீவனத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இதில் சிறிது எண்ணெய்ச் சத்தும் உள்ளது. சரியாக பராமரிக்கப்படவில்லை எனில் துர்நாற்றம் வீசத் தொடங்கிவிடும்.

9.. எண்ணெய் நீக்கப்பட்ட பாலிஸ் அரிசி

எண்ணெய் நீக்கப்பட்டதால் இதில் கொழுப்புச் சத்துக் குறைவே. எனினும் சாம்பல் மற்றும் புரதம் நிறைந்துள்ளது.

10.. வெள்ளைச் சோளம்

இது மஞ்சள் சோளம் போன்றே ஊட்டச்சத்துக்களைப் பெற்று இருந்தாலும் அதை விட வெள்ளைச் சோளத்தல் புரதம் அதிகம். கோழிகள் விரும்பி உட்கொள்ளும். மேலும் இதில் சில அமினோ அமிலங்கள் புண்ணாக்கில் இருப்பதைக் காட்டில் அதிக அளவில் உள்ளன.

11.. கடலைப்புண்ணாக்கு

இதில் புரதம் நிறைந்து காணப்படுகிறது. 40 சதவிகிதம் வரை தீவனக் கலவையில் பயன்படுத்தலாம்.

12.. மீன் தூள்

இது ஒரு சிறந்த கோழித்தீவனம். இதில் விலங்குப் புரதம் அதிகமாக உள்ளது. இது எலும்பு மீனா அல்லது கலனில் அடைத்த மீனா என்பதைப் பொறுத்து பயன்படுத்தும் அளவு வேறுபடும். இந்திய மீன் துகள்களில் 45-55 சதவிகிதம் புரதம் உள்ளது. மீனில் செதில்கள் இருந்தால் தீவனத்தரம் குறையலாம். எனவே செதில்கள் இல்லாமல் இருப்பது நல்லது.

13.. சுண்ணாம்புக்கல்

இது சுண்ணாம்புச் சத்து அதாவது கால்சியம் மிகுந்தது. எனினும் 5 சதவிகிதம் மேல் சேர்க்கக்கூடாது.

14.. கடற்சிப்பி ஓடு

இதில் 38 சதவிகிதம் வரை கால்சியம் இருப்பதுடன் சுவை மிகுந்தது. சுண்ணாம்பிற்குப் பதில் பயன்படுத்தப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios