Asianet News TamilAsianet News Tamil

வாழையில் ஏற்படும் நோய்க்கு தீர்வு…

the solution-to-the-banana-disease
Author
First Published Jan 6, 2017, 12:54 PM IST


சருகு நோய். இலை மஞ்சளாகி பின்பு ஓரங்கள் காய்ந்து போகும், அடி இலைகள் ஒடிந்து தொங்கும், கிழங்கைக் குறுக்காக வெட்டிப் பார்த்தால் செம்பழுப்பு நிறமாக காணப்படும்.

திசு வளர்ப்பு கன்றுகளில் வாடல் நோய் பிரச்சனை இருப்பது இல்லை. வேறு தோட்டத்திலிருந்து கிழங்கை எடுத்து நடுவதாயிருந்தால், நோய் தாக்காத கிழங்குகளை தேர்வு செய்ய வேண்டும்.

நீரின் மூலமாக பரவக்கூடிய இந்த பூசண நோயை வந்த பிறகு கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.

நடுவதற்கு முன்பு மற்றும் நட்ட பிறகு இரண்டு மாதங்களுக்கு ஒரு மாதங்களுக்கு ஒரு முறையும் ஒரு மரத்திற்கு 25 கிராம் ட்ரைகோடெர்மா விரிடி இடுங்கள். நடும் முன் ஒரு குழிக்கு 1/2 கிலோ சுண்ணாம்பு மற்றும் வேப்பம் புண்ணாக்கு இடுவது நல்லது.

புரோபிகோனாசோல் (”டில்ட்” என்ற பெயரில் கிடைக்கும்) என்ற மருந்தை 1 லிட்டர் நீருக்கு இ மில்லி என்ற அளவில் கரைத்து இலைகளும் மரமும் நன்கு நனையுமாறு தெளிக்கவும்.

வாழை இலை மேல் நீர் ஒட்டாது. ஆகவே அப்ஸா 80 என்ற ஒட்டு திரவம் 1 லிட்டர் நீருக்கு 5 மில்லி என்ற அளவில் சேர்த்து கலந்து தெளிக்கவும்.

மேலும் பாவிஸ்டின் என்ற மருந்தை 1 லிட்டர் நீருக்கு 2 கிராம் என்ற அளவில் கரைத்து ஊசியின் மூலம் வாழைத்தண்டுகள் செலுத்த வேண்டும்.

இவ்வாறு எல்லா முறைகளையும் கடைபிடித்தால் இந்நோய் தாக்குதலில் இருந்து வாழையைக் காப்பாற்றி விடலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios