விளைச்சவருக்கும், வாங்குபவருக்கும் இலாபம் தருவது “சாத்துக்குடி”…
எப்போதும் கிடைக்க கூடிய பழங்களுள் ஒன்று சாத்துக்குடி. வைட்டமின்-சி சத்து அதிகம் உள்ள சாத்துக்குடியில், நார்சத்து, இரும்பு சத்து, கால்சியம் சத்து போன்றவையும் உள்ளன.
வயிறு தொடர்பான பிரச்னைக்கு சாத்துக்குடி மிகவும் நல்லது. சாத்துக்குடி நோய் எதிர்ப்பு சக்தி உடையது.
உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்க கூடியது. மனித உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களான புரதம், கால்சியம், நார்ச்சத்து, உயிர்சத்து, போன்றவை பழங்களில் அதிகம் காணப்படுகின்றன.
உடலுக்கு நேரடியாக சத்துக்களை கொடுப்பவை பழங்கள் மட்டுமே. உண்ணும் உணவு எளிதாக ஜீரணமாவதற்கும், வாய், வயிறு, குடல் பகுதிகளில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் பழங்கள் உதவி புரிகின்றன.
சீதோஷ்ண காலங்க்ளில் விளையும் பழங்களை உண்டாலே உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.
அந்த வகையில் சாத்துக்குடி பழம் உடலுக்கு பலத்தை தருவதோடு ரத்த உற்பத்தியை அதிகரிக்கும் என்கின்றனர்.
இதயம் தொடர்பான பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கிறது. செரிமான சக்தியுள்ள இந்த சாத்துக்குடி ரத்த ஓட்டத்தை சீராக்கும் தன்மையுள்ளது.
நமது தோலை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது சாத்துக்குடி. சிகிச்சை பெற்று வருபவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி புத்துணர்வுடன் செயல்பட சாத்துக்குடி ஜூஸ் உதவுகிறது.
இவ்வளவு சத்துகள் நிறைந்த சாத்துக்குடியை விளைவித்தால், விற்கும் விவசாயிக்கும் இலாபம், வாங்கி உண்னும் வாடிக்கையாளருக்கும் இலாபம் நிச்சயம்.
ஏராளமான நன்மைகள் கொண்ட சாத்துக்குடியை அனைத்து சீசன்களிலும் பயிரிட்டு சாகுபடி செய்தால் நல்ல இலாபம் கிடைக்கும்.
நோயாளிகளுக்கு பஞ்சம் இல்லாத ஊரில் சாத்துக்குடிக்கும் பஞ்சம் இருக்காது.