கால்நடை வளர்ப்போரிடம் எழும் பொதுவான சில கேள்விகளும் அவற்றிற்கான பதில்களும்...

Some common questions arising from the livestock breeder and their answers ...
Some common questions arising from the livestock breeder and their answers ...


கேள்வி 1: 

மழைக்காலத்தில் ஆடுகளுக்கு நீலநாக்கு நோய் வருகிறது? எவ்வாறு தடுப்பது?

பதில்

ஆடுகளுக்கு வரும் நீலநாக்கு நோய்க்கு தடுப்பு ஊசி போட்டு தான் தடுக்க வேண்டும். இதற்கு மாற்று வழியே இல்லை.

கேள்வி 2: 

சில ஆட்டுக்கு மூக்கு, ஆசன வாயிலில் ரத்தம் வந்து துடிதுடித்து இறந்து விடுகின்றன. இதனை எவ்வாறு தடுக்கலாம்?

பதில்

இந்த நோய்க்கு அடைப்பான் நோய் என்று பெயர். இந்த நோய் கண்ட ஆட்டினை விற்கக்கூடாது குழித்தோண்டி புதைத்துவிட வேண்டும். இந்த நோய்க்கண்ட ஆட்டின் மாமிசத்தை உண்ணும் போது மனிதர்களும் பரவும் வாய்ப்பு இருக்கிறது. ஆகையால், இறந்த ஆட்டினை உடனே புதைத்து விட வேண்டும்.

கேள்வி 3: 

செம்மறிகள் ஆடு குட்டி போடும் போது கஷ்டப்படுகின்றன. சில சமயங்களில் தாய் ஆட்டின் உயிரை காப்பாற்றினால் போதும் என்றாகி விடுகிறது? எதனால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது?

பதில்

சில தாய் ஆடுகளில் இடுப்பு எலும்பு சரியான முறையில் இல்லை என்றால் இது போல் பிரச்சனை வரும். இன்னும் சில வேளைகளில் கிடா சரியானதாக இல்லாமல் இருந்தாலும் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

கேள்வி 4 : 

நல்ல வெள்ளாடு இனத்தை வளர்க்கலாம் என்று இருக்கிறேன். ஒரிஜனல் வெள்ளாட்டு இனம் எங்கு கிடைக்கும்?

பதில்

காட்டுப்பாக்கம் கால்நடை ஆராய்ச்சி நிலையம் மற்றும் கால்நடை பண்ணையத்தில் வெள்ளாட்டு ஒரிஜனல் ரகமான சமுனாபாரி ஆட்டை வளர்க்கிறார்கள். இந்த ஆட்டின் குட்டியை நீங்கள் வாங்கி வளர்க்கலாம். இதற்கு, இங்கு உங்களுடைய பெயரை பதிவு செய்துக் கொள்ள வேண்டும். ஆடு குட்டி போட்டு, சில நாட்களில் தகவல் கொடுப்பார்கள். அப்போது நீங்கள் சென்று வாங்கி சிறப்பாக வளர்க்கலாம்.

கேள்வி 5: 

ஆடுகளுக்கு மார்கழி மாதங்களில் அதிகளவில் துள்ளு நோய் ஏற்படுகிறது. ஆடுகள் திடீரென்று துள்ளி விழுந்து இறந்துவிடுகின்றன. ஏற்கனவே இதனை தடுக்க தடுப்பூசி எல்லாம் போட்டு இருக்கிறோம். இருந்தாப்போதிலும் நோய் தாக்குகிறது. இதனை எப்படி தடுப்பது?

பதில்

ஆடுகளுக்கு முறையான குடல்புழு நீக்கமும் செய்திருக்கிறீர்கள். கூடுதலாக நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசிகளையும் போட்டிருக்கிறீர்கள். ஆனால் நோய் தாக்கம் இருக்கிறது என்று சொல்கிறீர்கள். போட்டிருந்தால் பரவாயில்லை. மூன்று மாதத்துக்கு ஒரு முறை குடல்புழுவுக்கு செய்திருக்கிறீர்கள். இருந்தாலும் வருகிறதா? கால்நடை மருத்துவரை அழைத்து ரத்தம் எடுத்து சோதனை சாலைக்கு அனுப்பி சோதனை செய்ய வேண்டும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios