சாம்பார் பூசணி சாகுபடி செய்தால் உங்களுக்கு அதிக இலாபம் வரும்…

sambar pumpkin-cultivation-more-profitable-and-you-will


பல வருடங்களாக பூசணி மற்றும் பரங்கி வகைகள் மனித இன உணவுக்காக பயன்பட்டு வருகிறது. நாட்டுப் பூசணியில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதால் இதை மக்கள் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், நீர் வசதி குறைந்த மாவட்டமாக இருப்பினும் இங்குள்ள விவசாயிகள் குறைந்த நீரைக் கொண்டு சாகுபடி செய்யக் கூடிய பயிர்களைத் தேர்ந்தெடுத்து வெற்றி கண்டு வருகின்றனர்.

குறைந்த நீர், குறைந்த செலவு, குறைந்த வேலை ஆட்கள் ஆகியவைகளைக் கொண்டு மிக எளிதாக பயிரிடக் கூடிய பயிர்தான் சாம்பார் பூசணி.

மழை குறைவாக இருந்தால் நெல்லுக்குப் பதிலாக இதைப் பயிர் செய்யலாம். பொதுவாக பூசணிக்கு மணல் கலந்த வண்டல் மண் ரொம்ப நல்லது. வடிகால் வசதி நல்லா இருக்கனும், தண்ணி தேங்குச்சுன்னா அழுகிவிடும். செம்மண் பூமியில்கூட பூசணி நல்லா வரும். சாம்பார் பூசணி பயிர் செய்ய தைப்பட்டம் அல்லது மார்கழிப்பட்டம் மிகச் சிறந்தது. பருவ மழை குறைஞ்சா ஐப்பசிய விட்டுட்டு கார்த்திகைல கூட பயிரிடலாம்”

தைப்பட்டத்தில் சாம்பார் பூசணி 1 1/2 ஏக்கர்ல பயிர் செய்தால் மூணு தடவை நல்லா உழுது சரி பண்ணி, ஒரு ஏக்கருக்கு 5 வண்டி தொழுவுரம் போட்டு ரோட்டவேட்டர்ல நல்லா புழுதி அடிச்சு மட்டம் செய்ய வேண்டும். 

“ஒரு ஏக்கருக்கு 300 குழிகள் அதாவது 9 அடி X 9 அடி இடைவெளியில 1 அடி நீளம், 1 அடி அகலம், 1 அடி ஆழம் கொண்ட குழிகளை எடுத்து அதுல 1 கூடை நல்லா மக்குன தொழுவுரத்தைப் போட வேண்டும்.

ஒவ்வொரு குழியிலும் 5விதைகளை 1 இன்ச் ஆழத்துல ஊன்றி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நாட்டுப் பூசணியோட வயது 85 முதல் 90 நாள் தான். விதைக்குன்னு தனிச்செலவு செய்றது இல்லை. ஒவ்வொரு வருடமும் என்னோட நிலத்துல விளையிற பயிரிலிருந்து நானே விதை எடுத்து பயிர் செஞ்சுடலாம்.

பயிர் பண்ணுற நாட்டு இரகமே நல்ல விளைச்சலைக் கொடுக்கும். பிறகு ஏன் மத்த விதைகளைத் தேடி வாங்கணும். இதுக்குத் தண்ணீரை அதிகமாப் பாய்ச்சக் கூடாது. முளைப்பு வர்ற வரைக்கும் ஒவ்வொரு குழியிலயும் தண்ணியப் பூ மாதிரி ஊத்தணும். குடத்துல தண்ணி எடுத்து வந்து கையில ஊத்தி பூவாளி கணக்கா, விதை தெறிச்சு வெளியில வந்துடாம ஜாக்கிரதையா 1 நாள் விட்டு 1 நாள் ஊத்தணும். நாலு அல்லது அஞ்சாவது நாள் முளைப்பு வந்திடும். 25 நாட்களுக்குப் பிறகு வாய்க்கால் வழியா தண்ணி பாய்ச்சலாம்”

அடியுரமா 1 மூட்டை ஸ்பிக் டிஏபி மட்டும் போடலாம். அதன்பின் 30 வது நாள் 1 மூட்டை ஸ்பிக் டிஏபி மற்றும் 40 வது நாள் 35 கிலோ ஸ்பிக் யூரியாவோட வீட்ல இடிச்ச வேப்பமுத்து 15 கிலோ சேத்து 300 குழிக்கு தூவி நல்லா தண்ணி கட்டலாம்.

பூ, பிஞ்சு தென் பட்டவுடன், ஸ்பிக் சைட்டோசைம் 250 மி.லி மருந்தை 100 லிட்டர் தண்ணியில கலந்து குளுமையா தெளிக்க வேண்டும். எல்லாப் பூவும் பிஞ்சாகி கைக்களையா 2 முதல் 3 களை எடுக்கலாம். பிறகு, களை வளர்சியைப் பொறுத்து களை எடுத்தாப் போதும். நட்ட 45 – 50 நாள்ல பிஞ்சு பிடிக்க ஆரம்பிச்சது.

மஞ்சள் நோய் விழுந்தால் ரொம்ப ஆபத்து. முழு பயிரையே தோண்டி எடுத்து வெளியில கொண்டுபோய் புதைச்சிடணும். இந்த பயிரில் சிகப்பு வண்டும், சாம்பல் நோயும் பிரச்சனையாக இருக்கும். சில சமயங்கள்ல இலை சுருட்டு புழுவும் வரும்.

1 லிட்டர் நீருக்கு 5 மி.லி மோனோகுரோட்டோபோஸ், 2 கிராம் கார்பென்டாசிம் என்ற கணக்குல தண்ணீர் கலந்து தெளிக்கணும். இதை 2 முறை செஞ்சா போதும். 85 நாள்ல இலை பழுத்து, பழத்தோட காம்பும் மஞ்சள் கலரா மாற ஆரம்பிச்சது. உடனே பாய்ச்சரத நிறுத்த வேண்டும். இது தான் அறுவடைப் பக்குவம்.

ஒரு ஏக்கருல 12 டன் மகசூல் கிடைக்கும். ஒவ்வொரு காயும் 5 கிலோ முதல் 20 கிலோ வரைக்கும் எடையிருக்கும். சராசரியா 10 கிலோ அளவுல அதிக காய் கிடைக்கும். கொஞ்ச காய் 20 கிலோ அளவுலயும் கிடைக்கும். 1 கிலோ 5 ரூபாய்க்கு மதுரையில விலைக்குப் போடலாம். 12 டன் வித்ததுல ரூ 60,000 வரவு வந்தது.

ஆள் கூலி, உரம், அறுவடை, வண்டி செலவு என ரூ 10,000 வரைக்கும் செலவு போக கையில ரூ 50,000 இலாபமா கிடைக்கும். இந்தப் பூசணிப் பயிர் ராசியான பயிரு மட்டுமில்லாம ஈசியான பயிருங்கூட.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios