Asianet News TamilAsianet News Tamil

சக்தி - சுரபி - இயற்கை எரிவாயு உற்பத்தி கலன் பற்றி கேள்விப்பட்டதுண்டா? இதை வாசிங்க தெரியும்...

sakthi - Surabhi - Have you heard about natural gas producers? Know this ...
sakthi - Surabhi - Have you heard about natural gas producers? Know this ...
Author
First Published Feb 3, 2018, 12:26 PM IST


சக்தி - சுரபி - இயற்கை எரிவாயு உற்பத்தி கலன்

** சக்தி-சுரபி ஒரு சமையல் கழிவு அடிப்படையிலான இயற்கை எரிவாயு உற்பத்தி கலனாகும். வழக்கமான இயற்கை எரிவாயு உற்பத்தி கலன்களின் முறையைப் போலவே இது செயல்படுகிறது, ஆனால், நகர்ப்புறத் தேவைகளுக்கு ஏற்ப திருத்தியமைக்கப்பட்டிருக்கிறது.

** இந்தக் கலனில் காணப்படும் பாகங்களாவன, கழிவு உட்புகுத்தும் குழாய், கிரகிக்கும் கலன், வாயு கொள்கலன், நீர் உறை, வாயு எடுத்துச்செல்லும் அமைப்பு மற்றும் வாயு வெளிசெல்வதற்கான குழாய்.

** தமிழ்நாடு, கன்னியாகுமாரியில் அமைந்திருக்கும் விவேகானந்தா கேந்திரா, இயற்கை ஆதாரங்களுக்கான முன்னேற்ற திட்டத்தால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

** வழக்கமான இயற்கை எரிவாயு உற்பத்தி கலனை ஒப்பிடும் போது, சக்தி-சுரபி எவ்விதத்தில் மாறுபட்டதாக உள்ளது?

** வழக்கமான இயற்கை எரிவாயு உற்பத்தி கலன்களுக்கு மாட்டு சானம் ஒரு முக்கிய இடுபொருள் ஆகும். ஒவ்வொரு நாளும் மாட்டு சானத்தை நன்றாக கரைத்து, கஞ்சி போல் ஆக்கி வாயு கொள்கலன் உள் ஊற்ற வேண்டும். ஆனால், சக்தி-சுரபியில் மாட்டு சானமானது ஆரம்ப நிலையில் மட்டும் தேவை.

** பிறகு, தேவையான எரிவாயு உற்பத்திக்கு, சமையல் கழிவு மற்றும் பிற கழிவுகள் (மீதியான சமைத்த உணவு (சைவம் / அசைவம்), காய்கறி கழிவு, மாவு மில்லில் இருந்து கிடைக்கும் கழிவு, உணவல்லா எண்ணெய் வித்துக்களின் பிண்ணாக்குகள் (வேம்பு, காட்டமணக்கு) போன்றவை மட்டுமே போதுமானது.

** கவர்ச்சிகரமான இரண்டு நிறங்களில், 500 மற்றும் 1500 லிட்டர் கொள் அளவுகளில் இவை கிடைக்கின்றன.

** பொருத்துவதற்கு அல்லது இடமாற்றம் செய்வதற்கு எளிதாக இது இருக்கிறது. மேலும், தனிப்பட்ட ஒரு வீடாக இருந்தால், பின்புறத்திலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் மேற்பரப்பு அல்லது சன்ஷேட் (நிழலீட்டில்) இதை அமைக்க முடியும்.

** தேவைப்படும் மூலப்பொருட்கள் எளிதில் கிடைக்கக்கூடியவை

Follow Us:
Download App:
  • android
  • ios