கொய்யாவில் மாவுப்பூச்சியை இப்படியும் கட்டுப்படுத்தலாம்…

protection methods of guava from insects
protection methods of guava from insects


 

தோட்டத்தில் மூன்று கொய்யா,  இரண்டு நாரத்தை, நான்கு தென்னை மரங்களும் உள்ளது.  தற்போது கொய்யா மற்றும் நாரத்தை மரத்தின் இலைகள் மற்றும் குச்சிகளில் வெள்ளை, வெள்ளையாக காணப்படுகிறது. இதனால் இலைகள் வளர்ச்சி இல்லாமல் சுருட்டி, சுருட்டி இருக்கிறது.  பூ, காய்களும் வைக்கவில்லை.

இதனைக் கட்டுப்படுத்த

மாவுப்பூச்சிகள் எறும்பின் மூலமாக வருகிறது. மாவுப்பூச்சியில் தேன் போன்ற திரவம் வெளிவரும், இதனை உண்பதற்கு எறும்புகள் மாவுப்பூச்சியை எடுத்து மரத்தின் இலைகளில் வைத்துவிடுகிறது.  இப்படி மாவுப்பூச்சி இலைகளில் ஒட்டிக்கொண்டு மரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

இதற்கு முதலில் எறும்புகளை கட்டுப்படுத்தவேண்டும்.  எறும்புகளை கட்டுப்படுத்த லிண்டேன் என்ற பூச்சி மருந்தினை மரத்தைச்சுற்றி தரையில் தூவிவிடவேண்டும்.
மேலும் மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த ஒரு மரத்திற்கு ரோகார் – 3 மிலி மற்றும் மண்ணெணை – 1/2 மிலியை தண்ணீரில் கலந்து மரம், இலைகள் நன்கு நனையுமாறு தெளிக்கவேண்டும். இவ்வாறு செய்தால் மாவுப்பூச்சிகள் கட்டுப்பாட்டிற்கு வரும்.

உயிரியல் முறையில் கட்டுப்படுத்த:

உயிரியல் முறையில் மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த ஒட்டுண்ணி அட்டை காட்டுத்தோட்டம் மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் கிடைக்கின்றது. 

விவசாயிகள் நேரடியாக ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்று தங்கள் பெயரை பதிவு செய்துகொண்டு ஒட்டுண்ணி அட்டை பெற்றுக்கொள்ளலாம்.  ஒட்டுண்ணி அட்டையை மரத்தின் இலைகளில் கட்டு தொங்கவிட்டு, மாவுப்பூச்சி உயிரியல் முறையில் கட்டுப்படுத்தலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios