வெளிப்புற ஒட்டுண்ணிகளால் கால்நடைகளுக்கு இவ்வளவு நோய்கள் ஏற்படும்...

Outside bacteria make these diseases
Outside bacteria make these diseases


 

வெளிப்புற ஒட்டுண்ணியால் ஏற்படும் நோய்கள்

1.. சிறு ஈக்கள்

இவை வீட்டு ஈக்களைவிட மிகச்சிறியவை. சாம்பல் நிறம் கொண்டவை. இவ்வகை ஈக்கள் தோள் மற்றும் பின் பகுதியில் ஒட்டிக் கொண்டு நாள் முழுவதும் இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கும். ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் மாட்டை விட்டு சிறிது பறந்து, பின் மீண்டும் மாட்டிடமே வந்து ஒட்டிக் கொள்ளும். 

இவை முட்டையிடுவதற்கு மட்டுமே ஈரமான சாணங்ளைத் தேடி செல்லும். மற்ற நேரங்களில் மாட்டின் மேல் அமர்ந்து அதன் நுண்ணிய நீண்ட வாய்ப்பகுதியில 20-30 இடங்களில் துளையிட்டு இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருப்பதால் விலங்குகள் அடிக்கடி தேய்த்துக் கொண்டிருப்பதோடு மிகுந்த இரத்த இழப்பு ஏற்படும்.

2.. முக ஈக்கள்

வீட்டு ஈக்கள் போலவே இருக்கும் . இவை கூட்டமாக மாட்டின் முகத்தின் மேல் அமர்ந்து கொண்டு கண், வாய், உதடுகளில் சுரக்கும் திரவங்களை உறிஞ்சிக் கொண்டிருக்கும். இவை இரத்தத்தை உறிஞ்சுவதில்லை. ஆனால் வெளிர் சிவப்புக் கண் நோயைப் ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைப் பரப்புகிறது. இந்த ஈக்களைக் கட்டுப்படுத்துவது கடினம்.

3.. மாட்டு ஈக்கள்

இவை அளவில் வீட்டு ஈக்களை விடப் பெரியவை. கடிக்கும் வீட்டு ஈக்கள் எனவும் இவைகள் அழைக்கப்படுகின்றன. இது கால் மற்றும் அடிவயிற்றுப் பகுதியில் அதிகம் காணப்படுகிறது. கூர்மையான வாய்ப்பகுதி கொண்டு இதன் வயிற்றில் இரத்தத்தை நிரப்பிக் கொண்டு, நிழலான இடங்களில் சென்று இரத்தத்தை செரிக்கச் செய்யும். இதில் இரத்தக் குழம்பு அதிகமாக இருக்கும்.

4.. உண்ணிகள்

இவை இரத்தத்தை அதிக அளவு உறிஞ்சும் எனவே மாடுகள் ஓய்வின்றி இருக்கும். உண்ணியைக் கட்டுப்படுத்துதல் மிகவும் கடினம். அதிக அளவு உண்ணிகள் பெருகிவிடின் தடுப்பு முறைகள் பலன் தராது. இது அதிகமாக மேய்ச்சல் பகுதிகளில் காணப்படும். 

மாட்டின் மேல் மற்றும் தொழுவத்தில் உள்ள உண்ணிகளை இராசயன மருந்துகள் தெளித்துச் சரி செய்யலாம் அல்லது கால்நடைகளை மருந்தில் நனைத்தும், காது அடையாளக்குறிகளை சுத்தம் செய்தும் தூசிகளைச் சுத்தம் செய்தும் பரவலைத் தவிர்க்கலாம்.

5.. பேன்கள்

தோல் அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.  தோலைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சுகிறது. காதுகளைச் சுற்றி அதிகமாகக்  காணப்படும். இதனால் மாடுகள் பசியின்றி எடைக் குறைந்து வளர்ச்சியற்று இருக்கும். இது குளிர் காலங்களில் வழக்கத்தை விட அதிகமாகப் பெருகும். 

எனவே குளிர் காலம் தொடங்குமுன் பேன் பரவலைத் தடுக்க, மருந்து நடவடிக்கைகளைச் செய்யவேண்டும். 3 வாரங்கள் தொடர்ந்து மருந்து அளிக்கப்படவில்லையெனில் சில முட்டைகள் சாகாது. தெளிப்பு முறை (அ) விலங்குகளின் முதுகில் ஊற்றுவதன் மூலம் மருந்து கொடுக்கலாம்.

6.. தெள்ளுப்பூச்சி

இது தோல் நோயைத் தோற்றுவிக்கிறது. இதன் தொடர்ச்சி தோல் முழுவதும் பரவுகிறது. இத்தொழு நோய் சார்கோப்டிக், பூச்சிகளால் ஏற்படுகிறது. கோரியோப்டஸ், டெமோடெக்ஸ் மற்றும் சாரா கேட்ஸப் பூச்சிகள் லேசான பாதிப்பையே ஏற்படுத்துகின்றன. 

இது தொடர்பு மூலம் பரவுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாடுகளின் தோல் கடினமாகி முடி உதிர்ந்து விடும். இப்பூச்சி அதிக அளவு பெருகினால் கால்நடை நலிவடைந்து விடும். இவை குழியில் மறைந்து கொள்ளுவதால், கட்டுப்படுத்துவது கடினம். 

எனவே ஊசி மூலம் உட்செலுத்தும் மருந்துகளை உபயோகித்து நீக்கலாம். பேன் கட்டுப்பாட்டு முறை போல இதிலும் 2 (அ) 3 முறை பயன்படுத்தவேண்டும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios