கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழ உற்பத்தி அதிகரித்தும், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்காததால், மாம்பழங்கள் குப்பையில் கொட்டப்படுகின்றன. இதனால், கைவிடப்பட்ட கிரிஷ்மா திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் அதிக அளவில் மாம்பழம் உற்பத்தி செய்யப்படும் மாவட்டம் கிருஷ்ணகிரி. அங்கு உற்பத்தி செய்யப்படும் மல்கோவா, செந்தூரா, அல்ஃபோன்சா, நீலம் உள்ளிட்ட மாம்பழங்கள் இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. லட்சக்கணக்கான டன் உற்பத்தி செய்யப்பட்டாலும், அதனால் விவசாயிகள் பயன் அடைவதில்லை எனவும், இடைத்தரகர்கள் மற்றும் பெரிய நிறுவனங்களே லாபம் பார்ப்பதாகவும் தொடர் குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

மாம்பழ உற்பத்தியில் அசத்தும் விவசாயிகள்

கிருஷ்ணகிரியில் உள்ள விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்படும் மாம்பழங்கள், சென்னைக்கும் வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு 5 முதல் 10 மடங்குவரை விலை வைத்து விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில், மாம்பழங்கள் உற்பத்தி குறைந்துள்ள போதிலும் நல்ல விலை கிடைக்காததால் மாம்பழங்கள் கிலோ கணக்கில் குப்பையில் கொட்டப்படுகின்றன. இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரியில் மாங்கூழ் பதப்படுத்தவும், சந்தைப்படுத்தவும் அரசால் அறிவிக்கப்பட்டு, கைவிடப்பட்ட ‘கிரிஷ்மா’ திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் மா உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முன்னணியில் உள்ளது. இங்கு 35 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் மாம்பழ சாகுபடி நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் 3 லட்சம் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக வறட்சி மற்றும் மாங்கூழ் ஆலை நிர்வாகிகளின் சிண்டிகேட் அமைத்து உரிய விலையில் மாங்காய் கொள்முதலைத் தவிர்த்தல் போன்ற காரணங்களால் மா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு மாவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க அரசு அறிவித்த மாங்கூழ் பதப்படுத்தல் மற்றும் சந்தைப் படுத்தலுக்காக, ‘கிரிஷ்மா’ திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சத்துணவில் மாங்கூழ் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

லட்சக்கணக்கான டன் மாம்பழங்கள் குப்பையில்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் 3.50 லட்சம் டன் மாம்பழம் உற்பத்தி செய்யப்படும் நிலையில், இதில், 2 லட்சம் டன் மாங்காய்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் 1.50 லட்சம் டன் மாங்காய்கள் பயன்படுத்த முடியாத நிலையுள்ளில் சாலைகளிலும் வயல்களிலும் கொட்டப்படுவதாக தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.மாம்பழ விவசாயிகளைக் காக்கும் வகையில் 2006 ஆம் ஆண்டு ரூ.150 கோடியில், ‘கிரிஷ்மா’ திட்டத்தை அரசு அறிவித்தது. இதற்காக ஆலப்பட்டியில் 75 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கிருஷ்ணகிரியில் தயாரிக்கப்படும் மாங்கூழ் வெளிநாடுகளில் ஒரே பெயரில் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதற்காக இத்திட்டத்துக்கு, ‘கிரிஷ்மா’ எனப் பெயரிடப்பட்டது. ஆனால், இத்திட்டம் பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது, மா விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க , ‘கிரிஷ்மா’ திட்டத்தைச் செயல்படுத்த மீண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க முதல்வர் நேரடியாகத் தலையீட்டுத் தீர்வு காண வேண்டும் எனவும் தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

"கிரிஷ்மா" திட்ட விவரம்

துவக்கம்: 2006–ம் ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது, மொத்த திட்ட மதிப்பீடு: ₹150 கோடி விஷால வரம்பு மதிப்பீடு செய்யப்பட்டது. ஒவ்வொரு விவசாயியிடமும் ₹10,000 நன்கொடையாக வசூலிக்கப்பட்டது; மொத்தத்தில் ₹10 லட்சம் மட்டும் திரட்டப்பட்டது.ஆலப்படியில் வனத்துக்கு அருகில் 75 ஏக்கர் நிலம் முதலில் ஒதுக்கப்பட்டது. விவசாயிகள் 1.5% பங்கு, மத்திய அரசு (APEDA மூலம்) 10% பங்கு கொடுக்க முன்வந்தனர்.