Asianet News TamilAsianet News Tamil

தீவனங்களின் அரசியான குதிரை மசாலை இப்படிதான் சாகுபடி செய்யணும்?

Is the horse of the fodder of the fodder planted like this?
Is the horse of the fodder of the fodder planted like this?
Author
First Published Mar 1, 2018, 1:53 PM IST


குதிரை மசால் 

‘தீவனங்களின் அரசி’ என்று அழைக்கப்படுகின்ற இதில் 20 சதவீதம் புரதச்சத்தும், 2.30 சதவீதம் சுண்ணாம்பு சத்து 0.23 சதவீதம் பாஸ்பரஸ் சத்தும் உள்ளது. 

இதனை தினமும் கால்நடைகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவுதான் கொடுக்கவேண்டும். இதன் அளவு அதிகமானால் “வயிறு உப்பல்” ஏற்பட வாய்ப்புள்ளது. இது குளிர்கால இறவைப் பயிராகும்.

பருவம் : 

புரட்டாசி மாதம் ஏற்ற தருணம்

நிலம் : 

வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான நிலம்

விதை : 

8 கிலோ

இடைவெளி : 

வரிசைக்கு வரிசை 30 செ.மீ. வரிசையில் நெருக்கமாக விதைக்கவேண்டும்.

இரகம் : 

கோ-1

உரஅளவு அடியுரம் : 

தொழு உரம் – 10 டன்கள், தழைச்சத்து – 10 கிலோ மணிச்சத்து – 48 கிலோ, சாம்பல் சத்து -16 கிலோ

மேலுரம் : 

50 சதவீதம் பூக்கும் தருணத்தில் அறுவடை செய்ய வேண்டும்

மகசூல் : 

28-32 டன்கள் பசுந்தீவனம் கொடுக்கவேண்டும்

Follow Us:
Download App:
  • android
  • ios