மர இலைகளில் எவ்வளவு ஊட்டச்சத்துகள் இருக்குனு தெரியுமா?

irukkunu know-how-much-nutrients-in-the-leaves-of-the-t


மாடுகளுக்கு மர இலைகளைத் தீவனமாகக் கொடுக்காலம்.  மர இலைகள் கோடைக்காலத்தில் பசுந்தீவனத்திற்கு மாற்றாக இருக்கும். ஆனால் பசுந்தீவனத்தின் மொத்த அளவினை மர இலைகளைக் கொண்டு ஈடுசெய்ய முடியாது.

ஒரு வளர்ந்த மாட்டிற்கு நாளொன்றிற்கு 5 கிலோ மர இலைகளைத் தீவனமாக கொடுக்கலாம். மர இலைகளில் புரதச்சத்து அதிகமாக இருக்கும்.  மர இலைகளில் சில எதிர் ஊட்டச்சத்துக் காரணிகளாகிய டேனின், சுப்போனின் மற்றும் நிம்பின் இருப்பதால் மர இலைகளை மாடுகளுக்கு அதிகம் கொடுக்கக் கூடாது.

அதிகமாக மர இலைகளை மாடுகளுக்குக் கொடுக்கும் பொழுது மாடுகளில் வயிறு உப்பசம் மற்றும் அஜிரணக் கோளாறுகள் ஏற்படும்.

மாடுகள் தீவனம் உண்பதில் ஏற்படும் அளவுக் குறைவினை சரி செய்யும் முறை:

1.. கோடைக்காலத்தில் அடர்தீவனத்தை அதிகாலையிலும், மாலை நேரத்திலும் கொடுக்க வேண்டும்.  கோடைக் காலத்தில் மாடுகள் அடர் தீவனத்தைக் குறைத்து உண்ணும். எனவே உண்ணும் தீவன அளவில் அனைத்து ஊட்டச்சத்துகளையும் கிடைக்கும் வகையில் ஊட்டச்சத்துகளின் அடர்த்தியினை அதிகரிக்க வேண்டும்.

2.. கறவைமாடுகளுக்கு அடர்தீவனம், பசுந்தீவனம் மற்றும் உலர்தீவனங்களை எவ்வளவு கொடுக்க வேண்டும்?  எந்த நேரத்தில் கொடுக்க வேண்டும்?

3.. உதாரணமாக பால் கொடுக்கும் மாட்டிற்கு ஒவ்வொரு 1 லிட்டர் பாலுக்கும் 400 கிராம் அடர்தீவனமும், 2 கிலோ பசும்புல்லும் மற்றும் 1 கிலோ வைக்கோலும் கட்டாயம் கொடுக்க வேண்டும். மேற்கூறிய அளவு அடர்தீவனத்தை அதிகாலையிலும், மாலை நேரத்திலும் கொடுக்க வேண்டும். பசும்புல் மற்றும் வைக்கோலை எந்த நேரத்திலும் கொடுக்கலாம்.

கோடைக்காலத்தில் கறவைமாடுகளுக்கு எவ்வாறு தண்ணீர் கொடுக்க வேண்டும்?

எல்லா நேரத்திலும் குளிர்ச்சியான தண்ணீரை மாடுகளுக்கு கிடைக்கச் செய்வது மிகவும் அவசியம். தண்ணீரானது உடலில் பல்வேறு வளர்சிதை மாற்றம், செரிமானம் மற்றும் கழிவுகளை வெளியேற்ற இன்றியமையாத ஓர் ஊடடச்சத்தாகும். போதிய தண்ணீரை மாடுகளுக்குக் கொடுக்கவிலையென்றால் மாடுகளின் உடல் வளர்ச்சி மற்றும் பல் உற்பத்தி பாதிக்கப்படும்.  எனவே தண்ணீரைச் சரியான முறையில் கொடுப்பது இன்றியமையாததாகும்.

மாடுகளின் தீவனத்தில் உப்பு கட்டாயம் சேர்க்க வேண்டுமா? எவ்வளவு சேர்க்க வேண்டும்?

மாடுகளின் தீவனத்தில் உப்பினைக் கட்டாயம் சேர்க்க வேண்டும். உப்பில் சோடியம் மற்றும் குளோரைடு என்ற இரண்டு தாது உப்புகள் இருக்கின்றன.  உடலில் உள்ள செல்களில் இவ்விரு தாது உப்புகளும் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும், இத்தாது உப்புகள் உடலில் சவ்வூடுவரவல் சரியாக நடைபெற உதவுகின்றன. ஒரு வளர்ந்த மாட்டிற்கு நாளொன்றிற்கு 30 கிராம் உப்பினைத் தீவனத்துடன் கொடுக்க வேண்டும்.

தாதுப்புக் கலவை என்றால் என்ன? தாதுப்புக் கலவையினை மாடுகளுக்கு எப்பொழுது கொடுக்க வேண்டும்?

கால்நடைகளுக்குத் தேவையான பல்வேறு தாதுப்புக்களைக் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்துள்ள கலவை தாதுப்புக் கலவை எனப்படும். தாதுப்புக் கலவையினை அன்றாடம் கால்நடைகளுக்குத் தீவனத்தில் கலந்து கொடுக்க வேண்டும். பால் கொடுக்காத மாடுகளுக்கு நாளொன்றிற்கு 50 கிராமும், கன்றுகளுக்கு நாளொன்றிற்கு 10-15 கிராமும் கொடுக்க வேண்டும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios