சொட்டு நீர் பாசனத்தை எப்படி முறைப்படி செய்வது? இதை வாசிச்சு தெரிஞ்சுக்குங்க

How to do drip irrigation? Please read this
How to do drip irrigation? Please read this


விவசாயிகள் சொட்டு நீர் பாசன முறையைப் பயன்படுத்தி நீர் பாய்ச்சுவதற்கு முன், டிஸ்க் வடிகட்டியைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

மெயின் பைப், சப்மெயின் பைப், பக்கவாட்டு குழாய்களை, 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்.

நீண்ட நாட்கள் இயக்க தேவையில்லாத போதும் கூட உபகரணத்தை இயக்க வேண்டும்.

ஒவ்வொரு முறையும், உரம் மற்றும் அமில சிகிச்சை முடிந்து, 15 முதல், 30 நிமிடம் நீர் பாசனம் செய்ய வேண்டும்.

தண்ணீரில் கரையக்கூடிய உரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மண்ணுக்கு அடியில் அமைக்கப்பட்ட சொட்டுநீர் பாசனமெனில், தினந்தோறும் குறிப்பிட்ட அழுத்தத்தில் இயக்க வேண்டும்

உபகரணத்தில் உள்ள வடிகட்டியின் இன்லெட் மற்றும் அவுட்லெட், சப்மெயின், பக்கவாட்டு குழாயின் இறுதியில் தேவையான அழுத்தம் உள்ளதா என பார்க்க வேண்டும்.

உபகரணத்தை மண்ணின் ஈரப்பதம் மற்றும் பயிரின் நீர் தேவைக்கேற்ப இயக்க வேண்டும்.

உப்பு மற்றும் பாசனத்தினால், டிரிப்பரில் அடைப்பு ஏற்படாமல் இருக்க பார்த்துக் கொள்ள வேண்டும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios