செம்மறி ஆடு வளர்ப்பில் ஈடுபடுவதால் கிடைக்கும் நன்மைகளின் பட்டியல் இதோ...

Here is a list of the benefits of participating in sheep farm development
Here is a list of the benefits of participating in sheep farm development


செம்மறி ஆடு வளர்ப்பு

நிலம் அதிகமாக இருக்குமெனில், செம்மறி ஆடுகளை மேயவிட்டும், வீட்டில் தொழுவத்தில் பராமரித்தும் வளர்க்கலாம். வறட்சியான மற்றும் மானாவாரி நிலம் சார்ந்த பண்ணையத்தில், செம்மறி ஆடு வளர்ப்பு ஒரு முக்கிய அங்கமாக உள்ளது.சிறு மற்றும் குறுநில விவசாயிகள், நிலமற்ற வேளாண் தொழிலாளிகள், குறைந்த முதலீடு செய்து நிறைய லாபம் பெறலாம்.

நன்மைகள்
** அனைத்து சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப்படியான பராமரிப்பு அவசியம் இல்லை.

** கறியின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது

** உரோமம் கம்பளி தயாரிக்கவும் மற்றும் கறி இறைச்சிக்காகவும் பயன்படுகிறது.

** சராசரியாக ஒவ்வொரு முறையும் 1-2 குட்டிகள் ஈனுகிறது.

** ஒரு ஆட்டிலிருந்து சராசரியாக 22-30 கிலோ கறி கிடைக்கிறது.

** எருவை சேர்த்து நிலத்தை வளமாக்குகிறது.

இனங்கள்

உள்ளூர் இனங்கள் - இது வெவ்வேறு இடத்தைப் பொறுத்து மாறும்

மற்ற இனங்கள்

** மெரினோ - கம்பளிக்கு உகந்தது

** ராம்பெளலட் - கம்பளி மற்றும் கறிக்கு ஏற்றது.

** சோவியோட் - கறிக்கு ஏற்றது

** செளத் டான் - கறிக்கு ஏற்றது

நல்ல தரமான இன வகைகள், ஆட்டுத் தொழுவம் அமைப்பது, வளமான செம்மறி ஆடுகள் உற்பத்தி போன்றவற்றைப் பற்றி ஏதேனும் விபரம் தேவைப்பட்டால் அருகில் உள்ள கால்நடை பராமரிப்பு மையத்தையோ அல்லது வேளாண் அலுவலகத்தையோ அணுகவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios