தேக்கு மர நாற்றங்காலில் பூச்சி தாக்குதலும், தடுக்கும் முறைகளும் இதோ...
தேக்கு மர நாற்றங்காலில் பூச்சி தாக்குதலும், தடுக்கும் முறைகளும்
நாற்றங்காலிலுள்ள தேக்கு மர நாற்றுகளை இலையுண்ணிகளான கம்பளி புழுக்கள், பைப்புழுக்கள், வண்டுகள், வெட்டுக்கிளிகள் மற்றும் இலை சுரண்டிகளான சிறிய இளஞ்சிவப்பு புழுக்கள், தேக்கு தளிர்களையும் இலைகளையும் உண்ணும்.
மேலும் சாறு உறிஞ்சிகளான அஸ்வினி, தத்துப்பூச்சி, மாவுப்பூச்சி மற்றும் செதில் பூச்சிகள் இலைகளில் உள்ள சாறுகளை உறிஞ்சும். இதனால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
இப்பூச்சிகளை கட்டுப்படுத்த உயிர்பூச்சிக் கொல்லிகளான தசகாவ்யா அல்லது வேம்புபால் அல்லது நீம் அசால் அல்லது புகையிலை வேம்பு சோப்பு கரைசலை 1 லிட்டருக்கு 30 மி.லி. வீதம் 15 நாட்களுக்கு ஒரு முறை விசை தெளிப்பான் மூலம் தெளித்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
தோட்ட பராமரிப்பு : (Maintenance of Plantation)
தேக்கு மரக்கன்றுகள் நடவு செய்த 45 நாட்களுக்கு பிறகு 15 செ.மீ ஆழம் வரை மண்ணை கொத்தி களை எடுக்க வுண்டும். செடிகள் நன்கு வளர மாதம் இருமுறை நீர்விடுவது அவசியமாகும்.
ஆறு மாதத்திற்கு ஒருமுறை களை கொத்தி தொழுஉரம் இடவேண்டும். இவ்வாறு தொடர்ந்து தோட்டங்களை பராமரிப்பதன் மூலம் தேக்கு கன்றுகள் நன்கு வளர்ந்து மரமாகும்.
வரப்பு நடவு :
விவசாய நிலத்தில் வரப்புபகுதியில் 2மீX2மீ இடைவெளியில் தேக்கு குச்சி நாற்றுகள் அல்லது பை நாற்றுக்களை மேற்கானும் செய்முறைப்படி வரப்பு நடவு செய்யலாம். மேலும் பராமரிப்பு பணியும் அவ்வாறே மேற்கொள்ள வேண்டும்.
வரப்பு நடவுமுறைப்படி நடப்பட்ட தேக்கு மரக்கன்றுகள் தோப்பு முறைப்படி நடப்பட்ட மரக்கன்றுகளை விட நன்கு வளரும். ஏனெனில் தேக்கு மரக்கன்றுகளுக்கு போதுமான அளவு சூரிய ஒளியும், நல்ல காற்றோட்டம் மற்றும் சத்துக்களும் கிடைக்கும்.