வெள்ளாட்டு இனங்களும் அவற்றை பற்றிய அரிய தகவல்களும் இதோ…

Here are the goats and the rare information about them ...
Here are the goats and the rare information about them ...


பீட்டல்

இவை பெரிய ஆடுகள், சராசரி பாலளவு 1 கிலோ. இவ்வினம் பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்தது. இந்த ஆடுகளுக்கென்று சிறப்பான நிறம் என்று ஏதும் கிடையாது. பொதுவாகக் கறுப்பு, செந்நிறம், வெள்ளை மற்றும் அரக்கு நிறப் புள்ளிகளுடன் இருக்கும். சமுனாபாரி இனம் போன்று ரோமானிய மூக்கு இவ்வினத்திற்கும் உண்டு. ஆனால், குட்டையான தொங்கும் காதுகள் மட்டுமே உள்ளன. பின்னோக்கித் திருகிய கொம்புகளை உடையன. கிடாக்களுக்கு மட்டும் தாடி உண்டு. கிடாக்களின் எடை 50 – 75 கிலோ; பெட்டை ஆடுகள் 40 முதல் 50 கிலோ. 9 மாத வயதில் இறைச்சிக்கு வெட்டலாம். எடை 16 கிலோ.

மார்வாரி

இந்த வெள்ளாட்டினம் ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்தது. இது நடுத்தர உடலமைப்புக் கொண்டது. இது சிறந்த இறைச்சி இனமாகும். இது கருமையான நிறம் கொண்டது. கொம்புகள் திருகி இருக்கும். தினசரி பாலளவு 0.5 கிலோ. ஆண்டிற்கு 300 கிராம் முடியும் கொடுக்கும்.

சுர்த்தி

இவ்வினம் குஜராத்திய மாநிலத்தைச் சார்ந்தது. சிறிய இனம். தூய வெள்ளை நிறம் கொண்டது. சிறந்த பால் வழங்கும் இனம். சராசரி பாலளவு 2.5 கிலோ. ஆழ்கூள முறை வளர்ப்பிற்குச் சிறந்தது. உடல் எடை ஆண் 30 கிலோ பெண் 32 கிலோ.

பார்பாரி

இது சோமலாய நாட்டைச் சார்ந்தது. தற்போது உத்திரப்பிரதேசப் பகுதிகளில் காணப்படுகின்றது. இவ்வின ஆடுகள் குட்டையான கால்களுடன் காணப்படும். இவை பொதுவாக, வெள்ளை நிறத்துடன் இருக்கும். சிலவற்றிற்கு வெள்ளையில் செம்மை நிறப் புள்ளிகளும் உடலில் இருக்கும். கிடாக்கள் 40 முதல் 50 கிலோ எடையுடனும் பெட்டை ஆடுகள் 35 முதல் 40 கிலோ எடையுடனும் இருக்கும். இந்த இன வெள்ளாடுகள் 12-15 மாத இடைவெளியில் இருமுறை குட்டி போடும். பொதுவாக இரட்டைக் குட்டி போடும். தினசரி பால் அளவு 750 கிராம்.

சமுனாபாரி

இவ்வினம் உத்திரப்பிரதேசத்தைச் சார்ந்தது. இவ்வின ஆடுகள் உயர்ந்த கால்களையும், பெரிய உடலமைப்பையும் கொண்டவை. இவை, பல்வேறு உடல் நிறத்துடன் இருக்கும். வெள்ளை, மஞ்சள் நிறம் கலந்த செம்மை நிறத்துடனோ, செம்புள்ளிகள் மற்றும் கரும்புள்ளிகளுடனோ இருக்கும். இவற்றின் சிறப்பு அம்சங்கள் என்னவெனின், இவை நீண்ட, பெரிய, தொங்கும் காதுகளையும், ரோமானிய மூக்கையும் கொண்டிருப்பதாகும்.

கிடாக்கள் 60 முதல் 90 கிலோ எடை இருக்கும். பெட்டை ஆடுகள் 50 முதல் 60 கிலோ எடை இருக்கும். பொதுவாக, ஆண்டிற்கு ஒரு முறை ஒரு குட்டி மட்டும் போடும். இரு குட்டிகள் போடுவதும் உண்டு. தினமும் சராசரியாகக் கொடுக்கும் பாலளவு 2 முதல் 3 கிலோ. சின்ன சேலம், செட்டிநாடு ஆகிய அரசுப் பண்ணைகளில் இவ்வினங்கள் வளர்க்கப்படுகின்றன.

ஓஸ்மானாபாடி

இது மராட்டிய மாநிலம்தைச் சார்ந்தது. பெரிய உடலமைப்புக் கொண்டது. நீண்ட கொம்புகளையும், கருமை நிறத்தையும் உடையது. சில வெள்ளையானவை. இது இறைச்சிக்கும் பாலுக்கும் ஏற்ற இனம். ஆண் எடை 34 கிலோ, பெண் எடை 32 கிலோ.

தலைச்சேரி

மலபாரி எனவும் அழைக்கப்படும். இது கேரள மாநிலத்தின் இனமாகும். நடுத்தர உடலமைப்புக் கொண்டது. பெரும்பாலும் வெண்மை நிறமுடையவை. பிற நிறங்களும் இவ்வினத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இரண்டு, மூன்று குட்டிகள் போடும். பாலுக்கு ஏற்ற இனம். ஆண், பெண் இரண்டிலும் சிறு கொம்புகள் உள்ளன. ஆண் எடை 39 கிலோ. பெண் எடை 31 கிலோ. புதுக்கோட்டைப் பண்ணையில் வளர்க்கப்படுகின்றன.

வங்காளக் கறுப்பு

இது வங்க மாநிலம் மற்றும் அசாம் மாநிலத்தில் உள்ள இனமாகும். இது இறைச்சிக்கு சிறந்தது. அவ்வாறே அதன் தோலுக்கு பெயர் பெற்றது. பொதுவாக இரண்டு குட்டிகள் போடும்.

காஷ்மீரி

இது காஷ்மீரிலும் திபேத்திலும் உள்ள இனமாகும். வெள்ளை மற்றும் கறுப்பும் வெள்ளையும் இணைந்த நிறத்துடன் காணப்படும். இந்த ஆடுகள் கடுமையான குளிரையும், தாங்க வல்லவை. இதற்காக பாஸ்பினா எனப்படும் மெல்லிய கம்பளி முடிக்கடியில் வளர்க்கின்றது. இவை குளிர்காலத்தில் வளர்ந்து, வசந்த காலத்தில் உதிர்ந்து விடுகின்றன. இவை சீப்பு மூலம் சீவிச் சேகரிக்கப்பட்டு, உயர்ந்த கம்பளங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆடுகள் இறைச்சியும் வழங்குவதுடன் சுமையையும் எடுத்துச் செல்லவல்லவை.

பாஸ்மினா

இவை இமாசலப்பிரதேசம் மற்றும் லடாக் பகுதியில் உள்ளன. இவை சிறியவை. இவ்வின ஆடுகளில் பாஸ்மினா கம்பளி முன்சந்துகளிலும், உடல் ஓரங்களில் மட்டும் வளரும். இலை வெள்ளை மற்றும் அரக்கு நிறமுடையவை. சாம்பல் நிறம் கொண்டவையும் உண்டு. இவை உயர்ந்த மலைப் பகுதிகளில் சுமை ஏற்றிச் செல்ல உதவுகின்றன.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios