diseases and curing methods for coconut tree

1.. செந்நீர் வடிதல்

தென்னை மரத்தின் தண்டு பகுதியில் கருஞ் சிவப்பு நிறமான ஒரு திரவம் வடியும். காய்ந்த பின் கருப்பு நிறமாக மாறுகிறது.

கட்டுப்படுத்தும் முறை

நோய் தாக்கிய மரத்தின் பட்டைகளை உளியால் செதுக்கி எடுத்து தார் அல்லது போர்டோ பசை பூசுவதால் இந்நோய் வராமல் தடுக்கலாம்.

2.. குருத்து அழுகல்

நோய் நடுக் குருத்தும் அதைச் சுற்றிலும் உள்ள ஒரு சில மட்டைகளும் வெளியேறுவதும் வாடுவதுமே இந்நோயின் அறிகுறிகளாகும். பாதிக்கப்பட்ட நடுக் குருத்தும் மட்டைகளும் முறிந்து கீழே விழுந்து விடுகின்றன.

கட்டுப்படுத்தும் முறை

நடுக்குருத்து வாட ஆரம்பித்த உடனேயே கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தாக்கப்பட்ட மட்டைகளையும் அதைச் சுற்றியுள்ள ஒரு சில மட்டைகளையும் வெட்டி எடுத்து எரிந்து விட வேண்டும். வெட்டப்பட்ட பாகத்தின் மேல் போர்டோ பசையை தடவ வேண்டும்.

3.. தலைச் சிறுத்தல்

நோய்நுண்ணூட்ட சத்துக் குறைவால் இந்நோய் ஏற்படுகிறது. இதனால் மட்டைகளின் நீளம், அகலம், எண்ணிக்கை போன்றவை குறைவாக காணப்படும். மரத்தின் தண்டுப்பகுதி போகப்போக சிறுத்து மேற்பகுதியில் பென்சில் முனை போன்று காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை

பரிந்துரைக்கப்பட்ட உரங்களுடன் ஒவ்வொன்றிலும் 225 கிராம் அளவில் துத்தநாக சல்பேட், தாமிர சல்பேட், மாங்கனீசு சல்பேட், பெரஸ் சல்பேட் போராக்ஸ் மற்றும் 10 கிராம் அமோனியம் மாலிப்டேட் ஆகிய நுண்ணூட்ட சத்துக்களை 30 லிட்டர் தண்ணீரில் கரைத்து மரத்தில் வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும்.