- Home
- விவசாயம்
- Training: வீட்டில் இருந்தே சம்பாதிக்க 2 நாள் பயிற்சி.! பணத்தை அள்ளி தரும் மைக்ரோ கிரீன்ஸ்.! காசை கொட்டி கொடுக்கும் காளான் வளர்ப்பு.!
Training: வீட்டில் இருந்தே சம்பாதிக்க 2 நாள் பயிற்சி.! பணத்தை அள்ளி தரும் மைக்ரோ கிரீன்ஸ்.! காசை கொட்டி கொடுக்கும் காளான் வளர்ப்பு.!
ஈரோடு மைராடா வேளாண் அறிவியல் மையம், நவம்பர் மாதம் மைக்ரோ கிரீன்ஸ், காளான் வளர்ப்பு குறித்த பயிற்சிகளை வழங்குகிறது. குறைந்த இடத்தில் அதிக வருமானம் ஈட்டும் நுண் கீரைகள் சாகுபடி, காளான் வளர்ப்பு குறித்த நுணுக்கங்கள் கற்பிக்கப்படும்.

காசை அள்ளிக்கொடுக்கும் மைக்ரோ கிரீன்ஸ்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செயல்பட்டு வரும் மைராடா வேளாண் அறிவியல் மையம், விவசாயிகள் மற்றும் விவசாயத்தில் ஆர்வமுள்ள பொதுமக்களுக்கு பயனுள்ள பயிற்சிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக நவம்பர் மாதத்தில் இரண்டு முக்கியமான பயிற்சி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நவம்பர் 25-ம் தேதி ‘நுண் கீரைகள் சாகுபடி’ (Micro Greens) பயிற்சி நடத்தப்பட உள்ளது. குறைந்த இடத்தில் கூட லட்சங்களில் வருமானம் ஈட்டிக் கொடுக்கக் கூடிய இந்த மைக்ரோ கிரீன்ஸ் தொழில்நுட்பத்தை விவசாயிகளும், வீட்டுத்தோட்டம் செய்பவர்களும் எளிதில் கற்றுத் தங்கள் வருமானத்தை பலமடங்கு உயர்த்திக்கொள்ளலாம்.
விதைத் தேர்வு, மண் கலவை, துளசி, கொத்தமல்லி, சின்ன கீரை உள்ளிட்ட பல்வேறு நுண் கீரைகளின் வளர்ப்பு முறைகள், நோய் மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்தல் போன்றவை இந்த பயிற்சியில் விரிவாக கற்பிக்கப்படுகின்றன.
காளான் வளர்ப்பு பயிற்சி.!
அதேபோல், நவம்பர் 28-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’ (Mushroom Cultivation) தொடர்பான சிறப்பு பயிற்சியும் நடைபெற உள்ளது. குறைந்த முதலீட்டில் அதிக ஆதாயம் தரும் தொழிலாக காளான் சாகுபடி தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கான சரியான நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டால் ஒரு குடும்பத்துக்கு நிலையான வருமானத்தை உருவாக்கும் திறன் இந்த தொழிலுக்கு இருக்கிறது. இந்த பயிற்சியில் காளான் வகைகள், வளர்க்க தேவையான சூழல் உருவாக்குதல், பயிர் பராமரிப்பு, உற்பத்தி மேம்பாடு மற்றும் மார்க்கெட் சேர்ப்பு உள்ளிட்ட விஷயங்கள் நடைமுறை விளக்கங்களுடன் வழங்கப்படுகின்றன.
இதெல்லாம் ஒரு கட்டணமே கிடையாது
இந்த பயிற்சிகளுக்குமான கட்டணம் ரூ.200 ஆகும். இதில் பங்கேற்பதற்கு முன்பதிவு அவசியம் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டியது முக்கியம். பயிற்சி சான்றிதழ், கற்றல் பொருட்கள் மற்றும் தொழில் தொடங்க உதவும் வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகின்றன. பதிவு மற்றும் கூடுதல் தகவல்களுக்கு: 94860 77454. விவசாயம் மற்றும் தோட்டக்கலை துறையில் வளர்ச்சி காண விரும்புவோர் இந்த வாய்ப்பினை தவறவிட வேண்டாம்.

