Asianet News TamilAsianet News Tamil

கன்று ஈன்ற பசு மற்றும் எருமை மாடுகளை இப்படிதான் பராமரிக்கணும்...

Calf and cow cows are treated like this ...
Calf and cow cows are treated like this ...
Author
First Published Feb 8, 2018, 2:29 PM IST


கன்று ஈன்ற பசு மற்றும் எருமை மாடுகளை பராமரிக்கும் முறைகள்

** கன்று ஈன்றவுடன் மாடுகளின் பின்புறத்தை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த நீரைக் கொண்டு கழுவிவிட வேண்டும்.

** கன்று ஈன்ற மாடுகளுக்கு குடிப்பதற்கு வெதுவெதுப்பான நீரைக் கொடுக்க வேண்டும்.

** கன்று ஈனும் சமயத்தில் மடி பெருத்து காணப்படும். இந்த சமயத்தில் மடியில் காயம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வது வசியமாகும்.

** சில மாடுகளில் கன்று ஈனும் சமயத்திற்கு முன்பும் கன்று ஈன்ற பின்பும் மாட்டின் பின்புறம் மற்றும் மடியில் நீர்க்கோர்த்து இருக்கும். இது கன்று ஈன்ற பின்பு தானாகவே குறைந்துவிடும்.

** பொதுவாக கன்று ஈன்ற மாடுகளில் 2-4 மணி நேரத்திற்குள் நஞ்சுக் கொடி விழுந்துவிடும். அவ்வாறில்லாமல் 8-12 மணி நேரம் வரை நஞ்சுக்கொடி விழவில்லையென்றால் கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.

** கன்று ஈன்ற மாடுகளில் கன்றினை பால் ஊட்ட விடுவது மற்றும் சீம்பால் கறப்பது போன்ற செயல்கள் நஞ்சுக்கொடி தானாக விழ வழிவகுக்கும்.

** கன்று ஈன்ற மாடுகள் இருக்கும் கொட்டில் சுகாதாரமாக பராமரிக்கப்பட வேண்டும். இல்லையெனில் கருப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் எளிதில் பரவ ஏதுவாகும்.

** கன்று ஈன்று மாடுகளுக்கு அரிசி அல்லது கோதுமை தவிட்டைக் கொடுக்கலாம். பசுந்தீவனம் கொடுப்பது நல்லது. கலப்பு தீவனத்தைப் பொருத்தவரை சிறிது, சிறிதாக மாட்டின் பால் உற்பத்திக்கு ஏற்றவாறு அதிகரிக்க வேண்டும்.

** அதிக பால் உற்பத்தி திறன் கொண்ட மாடுகளில் கன்று ஈன்றவுடன் பால்சுரம் ஏற்பட வாய்ப்புண்டு. இதனை தவிர்க்க கால்நடை மருத்துவரின் உதவி கொண்டு தக்க மருத்துவ முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

** சில மாடுகளில் கன்று ஈன்றவுடன் அல்லது ஓரிரு நாட்களில் கருப்பை வெளித்தள்ளுதல் ஏற்படும். கஷ்டப்பட்டு கன்று ஈன்ற மாடுகள், நஞ்சுக் கொடி தங்கிய மாடுகள், வயதான, மெலிந்த மாடுகளில் கருப்பை வெளித்தள்ளுவதற்கு அதிக வாய்ப்பிருந்தால் இம்மாடுகளை கவனத்துடன் பராமரித்து இப்பிரச்சினையிலிருந்து மாடுகளை காப்பாற்ற வேண்டும்.

** கன்று ஈன்ற 60 நாட்கள் கழித்து வரும் சினைப்பருவத்தில் மாடுகளுக்கு கருவூட்டல் செய்து 90 நாட்களுக்குள் மாடுகளை மீண்டும் சினையாக்கி விட வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios