ஆட்டுக் கிடாவை தேர்ந்தெடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்கணும்!
கிடாக்களைப் பொறுத்தவரைக்கும் நல்ல தரமான 'பொலிச்சல்’ உள்ள கிடாயா இருந்தாத்தான், நல்லத் தரமானக் குட்டிகள் கிடைக்கும்.
ஒரு பொலிக் கிடாவை 'மந்தையில பாதி’னு சொல்லலாம். நல்ல பாரம்பரியமான, பால் அதிகமா கொடுக்குற தாய் ஆட்டோட குட்டிகள்ல, நல்ல உடல் வளர்ச்சியுள்ள 6 வயசுள்ள கிடா குட்டிகளைத்தான் பொலிக் கிடாயா தேர்வு செய்யணும்.
அதிக குட்டி போடுற தாயோட குட்டிகளை பொலிக் கிடாயா தேர்ந்தெடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
சிலர், மந்தையில இருக்கற எல்லா ஆடுகளுக்கும் ஒரே கிடாவைப் பயன்படுத்துவாங்க. அப்படி செஞ்சா, இனப்பெருக்கம் சரியா இருக்காது. 20 முதல் 30 ஆட்டுக்கு ஒரு கிடாங்கிற கணக்குல தான் பொலிக் கிடாவைப் பயன்படுத்தனும்.
பொலிக் கிடாவை வருஷத்துக்கு ஒரு தரம் மாத்திடணும். அடுத்தக் கிடாவை வெளிய இருந்துதான் கொண்டு வரணும்.
பெரிய மந்தைகள வெச்சுருக்கற விவசாயிகள், தங்களுக்குள்ள கிடாக்களை மாத்திக்கலாம்.