மாதத்திற்கு 10 ஆயிரம் இலாபம் தரும் மல்லிகை சாகுபடி…
“நெல், கரும்பு மாதிரியான பயிர்களில் சிலசமயம் நட்டம் வரும். அதனால், நிரந்தர வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக 15 சென்ட் இடத்தில் மல்லிகை நடவு செய்யலாம் என்று முடிவு செய்து ராமேஸ்வரத்தில் இருந்து நாற்று வாங்கிட்டு வந்து நடவு செய்தார் ரமேஷ்.
முழுக்க முழுக்க இயற்கை முறையில் சாகுபடி செய்வதால், செடியோட வளர்ச்சி சிறப்பா இருக்கு. ஆறாவது மாசத்துல இருந்து வருமானம் எடுக்கலாம் என்றும் நட்டு 14 மாசமாகிறது என்றும் விவரித்தார்.
ஆரம்பத்தில் தினமும் 100 கிராம், 200 கிராம்னு கிடைச்சது. ஆறாவது மாசத்துக்குப் பிறகு ஒரு கிலோ அளவுல கிடைச்சது. ஒவ்வொரு மாசமும் மகசூல் கூடிக்கிட்டே இருக்கு. இப்போ, தினமும் ரெண்டு கிலோவுல இருந்து, பத்து கிலோ வரைக்கும் மகசூல் கிடைக்குது. அடுத்த வருஷத்துல தினமும் 25 கிலோ அளவுக்கு மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்.
இடையில ஊடுபயிரா மிளகாய், வெங்காயம் போட்டேன். மிளகாய் மூலம் 12 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சது. வெங்காயத்தை வீட்டுத் தேவைக்கு வெச்சுக்கிட்டோம். ரசாயன உரம் போட்டு சாகுபடி செய்யுற விவசாயிகளுக்கு சிலசமயம் பூ இல்லாம போயிடுது. ஆனா, இயற்கை முறையில எப்பவுமே பூத்துக்கிட்டே இருக்கு. இப்ப, என்னோட ஒரு ஏக்கர்ல 50 சென்ட் கரும்பு, 15 சென்ட் தீவனப்புல், 15 சென்ட் மல்லிகைப்பூ இருக்கு. மீதி 20 சென்ட், நெல் நடவுக்குத் தயாரா இருக்கு. குத்தகை நிலம் ஒரு ஏக்கர்ல நெல் போட்டிருக்கேன்” என்ற மல்லிகை மூலம் கிடைக்கும் வருமானம் குறித்துச் சொன்னார் ரமேஷ்.
“ஒரு கிலோ மல்லிகைப்பூ 50 ரூபாய்ல இருந்து 1,000 ரூபாய் வரை விற்பனையாகும். தினம் சராசரியா எனக்கு 5 கிலோ பூ கிடைக்குது. அந்த வகையில மாசத்துக்கு 150 கிலோ. கிலோவுக்கு சராசரி விலையா 100 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே மாசம் 15 ஆயிரம் ரூபாய் கிடைச்சுடும். செலவு 5 ஆயிரம் ரூபாய் போக, மீதம் 10 ஆயிரம் ரூபாய் லாபமாக கிடைக்கும்” என்றார்.
“ரெண்டு வருஷத்துக்குப் பிறகு தினம் சராசரியா 10 கிலோ வீதம் பூ கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். அப்படி கிடைச்சா, மாசம் 20 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். எப்படியும் வருஷத்துல எட்டு மாசத்துக்கு இந்த வருமானம் கிடைச்சுக்கிட்டே இருக்கும்” என்று நம்பிக்கையுடன் சொன்னார் ரமேஷ்..