பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்... 47 பேர் உயிரிழப்பு

https://static.asianetnews.com/images/authors/5375b41b-c303-5568-beda-e699e57b9beb.jpg
First Published 8, Nov 2018, 10:18 AM IST
Zimbabwe bus accident...47 people kills
Highlights

ஜிம்பாப்வேயில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 47 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஜிம்பாப்வேயில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 47 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

ஜிம்பாப்வேயின் தலைநகரான ஹராரேயில் இருந்து ருசாபே நகருக்கு செல்லும் சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எதிர் எதிரே வந்த இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் 47 உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

loader