Zakir Naik: மதபோதகர் ஜாகீர் நாயக் அமைப்புக்கு மீண்டும் சரியான ஆப்பு.. மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு.!
மும்பையை சேர்ந்தவர் இஸ்லாமிய மத பிரசாரகர் ஜாகீர் நாயக். இவர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம், கிளர்ச்சியை தூண்டும்படி பேசியது ஆகிய குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இஸ்லாமிய இளைஞர்களை தீவிரவாத செயல்களுக்கு ஊக்குவித்த ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மும்பையை சேர்ந்தவர் இஸ்லாமிய மத பிரசாரகர் ஜாகீர் நாயக். இவர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம், கிளர்ச்சியை தூண்டும்படி பேசியது ஆகிய குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல், கடந்த 2016ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி வங்கதேச தலைநகர் டாக்காவில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், வெளிநாட்டினர் 17 பேர் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒரு இளைஞர், ஜாகீர் நாயக்கின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு, தாக்குதலை நடத்தியதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க;- அன்புமணிக்கு நல்லா உரைக்கிற மாதிரி சொன்னீங்க.. பாரதிராஜாவுக்கு வாழ்த்து சொன்ன ஜி.ராமகிருஷ்ணன்..!
இதனையடுத்து, இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற ஜாகீன் உசேன் மலேசியாவில் தஞ்சமடைந்து அங்கு நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளார். இதனையடுத்து, அவரது அமைப்புக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க;-jai Bhim: நடிகர் சூர்யாவை வம்பிழுத்தால் வேடிக்கை பார்க்க மாட்டோம்.. பாமகவை எச்சரிக்கும் கருணாஸ்..!
இந்நிலையில், சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சர் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு எதிராக அவரின் பேச்சுக்கள் இருப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.