உலகின் மிக விலை உயர்ந்த காரில் பயணித்த யூ-டியூபர் மிஸ்டர் பீஸ்ட்: அந்த காரில் இவ்வளவு விஷயம் இருக்கா?
உலகின் அதிக விலை கொண்ட காரில் பிரபல யூ-டியூபர் ஜிம்மி டொனால்ட்சன் பயணித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதிக சப்ஸ்கிரைபர்களை கொண்ட யூ-டியூப் சேனல்களில் ஒன்றான மிஸ்டர் பீஸ்ட் சேனலின் யூடியூபர் ஜிம்மி டொனால்ட்சன், தனித்துவமான வாகனங்களில் தான் பயணம் செய்யும் வீடியோவை அண்மையில் வெளியிட்டார். அந்த வீடியோவானது, 1 அமெரிக்க டாலர் விலையிலான காரில் தொடங்கி, உலகின் மிக விலை உயர்ந்த காரான 100 மில்லியன் டாலர்கள் மாதிப்பிலான ஃபெராரி காருடன் முடிகிறது.
யூடியூபர் ஜிம்மி டொனால்ட்சன் தனது ஓட்டுநர் அனுபவத்தைப் பதிவு செய்தது மட்டுமல்லாமல், அந்த வாகனங்களின் அம்சங்களையும் சோதித்து அதுகுறித்து தெரிவித்துள்ளார். முன்னதாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவுக்கான டீசரை வெளியிட்ட அவர், “எங்கள் புதிய வீடியோவிற்கு ஒரு பறக்கும் கார், ஒரு படகு கார் மற்றும் 100 மில்லியன் டாலர்கள் கொண்ட கார் கிடைத்தது என்பதை என்னால் நம்ப முடியவில்லை.” என்று பதிவிட்டிருந்தார்.
ஜிம்மி டொனால்ட்சனின் யூ-டியூப் சேனலான மிஸ்டர் பீஸ்ட்டில் வெளியாகியிருக்கும் அந்த 16 நிமிட வீடியோவுக்கு, “ $1 vs $100,000,000 Car” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பார்வையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது, ஃபெராரி நிறுவனத்தின் முதல் காரான ஃபெராரி 125எஸ் கார்தான்.
‘இந்த கார்கள் ஏன் மிகவும் விலை உயர்ந்தவை என்பதைக் காட்ட நாங்கள் கார் ஓட்டப்போகிறோம்; பறக்கப் போகிறோம்; படகு ஓட்டப் போகிறோம்’ eன வீடியோவில், ஜிம்மி டொனால்ட்சன் விளக்குகிறார். ஒவ்வொரு விலையிலான கார்களையும் ஓட்டி சோதனை செய்த பிறகு, இறுதியாக 100 மில்லியன் டாலர்கள் மாதிப்பிலான ஃபெராரி காரில் அவர் பயணம் செய்கிறார்.
அப்போது வீடியோவில் பேசும் அவர், “இந்த கார் மிகவும் வரலாற்று சிறப்புமிக்கது; மதிப்புமிக்கது. இந்த அருங்காட்சியக பிரதிநிதி மட்டுமே பூமியில் இதை ஓட்ட அனுமதிக்கப்படுகிறார். அதுவும் இந்த பாலத்தில் மட்டுமே இதை ஓட்ட அனுமதிக்கப்படுகிறது. இந்த 100 மில்லியன் டாலர் காருக்கு எதுவும் சேதம் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, இந்த காரை ஓட்டுவதற்காக சாலைகளை போலீஸ் அதிகாரிகள் மூடி விட்டனர். தூய்மை பணியாளர்கள் சாலைகளில் உள்ள ஒவ்வொரு குழிகளையும், பள்ளங்களையும் மூடி விட்டனர். சாலைகள் மிகவும் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளன.” என்கிறார்.
தமிழ்நாட்டின் பணக்கார பெண் இவர்தான்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ஜிம்மி டொனால்ட்சன் யூடியூப் மூலம் கடந்த 2021ஆம் ஆண்டில் 54 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சம்பாதித்ததாக கூறப்படுகிறது. ஃபோர்ப்ஸ் தகவலின்படி, யூடியூப்பில் அதிக வருவாய் கிடைக்கும் கன்டென்டை உருவாக்கியவர் இவர்.