கொரோனாவை அழிக்க  மறந்து கண்டுபிடித்தால் ஒரு கோடி பரிசு கொடுக்க தயார் என பிரபல ஹாலிவுட் நட்சத்திரம் ஜாக்கிசான் அறிவித்துள்ளார் . சீனாவில்   வுகான் நகரில்  உருவான கொரோனா வைரஸ் சீனா முழுவதும் வேகமாக பரவி வருகின்றது . இதுவரையில் 908 பேர் உயிரிழந்துள்ளனர் .  சீனாவில் இருந்து சுமார் 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா பரவியுள்ளது இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் சீன அரசு திணறி வருகிறது .  இந்நிலையில் சீனாவில் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது .

 

அமெரிக்கா ,  ஆஸ்திரேலியா ,  சீனா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க போராடி வருகின்றன, இந்நிலையில் உலக சுகாதார நிறுவனமும் சீனாவுடன் இணைந்து மருந்து கண்டுபிடிப்பில்  ஈடுபட்டுவருகிறது .  இதற்கிடையே காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க அவசரஅவசரமாக ஆயிரம் படுக்கை அறைகளைக் கொண்ட இரண்டு தற்காலிக மருத்துவமனைகளை சீனா உருவாக்கி உள்ளது .  இந் நிலையில் எச்ஐவி வைரஸ் கிருமிகளை அழிக்கும் மருந்துடன் அதி தீவிரமான காய்ச்சலுக்கு வழங்கும்  மருந்தினை கலந்து செய்த கலவை மருந்து கொரோனா வைரஸை  குணப்படுத்துகிறது என தாய்லாந்து நாட்டு மருத்துவர்கள் தெரிவித்தனர்.  ஆனால் அது தற்போது ஆய்வில் இருந்து வருகிறது ,  

இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான ஜாக்சன் புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார் .  அதில்,  இந்த கொடிய வைரசை தோற்கடிக்க விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் முக்கியம் என்னை போன்ற பலரும் இதை நம்பி இருக்கிறோம் ,  அதனால் வைரஸை கட்டுப்படுத்த விரைவில் ஒரு மருந்து உருவாக்க முடியும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்  ஒரு தனி நபரோ அல்லது ஒரு அமைப்போ கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் அவர்களுக்கு ஒரு மில்லியன் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு கோடி ரூபாய் பணம் அளிப்பேன்  பணத்தை பெரிதாக என்னி இதை நான் கூறவில்லை,   எனது நண்பர்கள் வைரசால் பாதிக்கப்பட்டு போராடுவதை என்னால் பார்க்க முடியவில்லை ,  அவர்கள் நன்றாக வாழவேண்டும் அதற்காகத்தான் இந்த அறிவிப்பு என அவர் கூறியுள்ளார் .