கையாலாகாத அமெரிக்கா சீனா மீது போட்ட பழி..!! ட்ரம்ப்பை ஏறியடித்த பில் கேட்ஸ்..!!
ஒரு வைரஸ் ஒரு நாட்டை முதலில் தாக்கினால் அந்த நாடு எப்படி நடந்து கொள்ளுமோ அப்படித்தான் சீன நடந்து கொண்டுள்ளது அது ஆரம்ப கட்டத்தில் பல வேலைகளை செய்தது .
சீனாவின் மீது தொடர்ந்து அமெரிக்கா குற்றம் சாட்டி வரும் நிலையில் , அந்நாட்டைச் சேர்ந்தவரும் உலக பெரும் பணக்காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் சீனாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் . சீனாவின் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் மிகவும் தவறானது எனவும் அவர் கூறியுள்ளார் . பில்கேட்ஸின் இந்த கருத்து அமெரிக்காவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது . உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது . இதில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்த வைரஸுக்கு அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது .இதுவரை அமெரிக்காவில் 10 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது . இங்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதில் அமெரிக்க பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக சரிந்துள்ளது .
தங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புக்கும் சீனா தான் காரணம் சீனா தான் இந்த வைரஸை பரப்பியது , அமெரிக்காவில் ஏற்பட்ட பாதிப்புக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்திலும் ஏற்பட்ட பாதிப்புக்கும் சீன பதில் சொல்ல வேண்டும் . என அமெரிக்கா தொடர்ந்து சீனாவை குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் பல சர்வதேச நாடுகள் கொரோனாவை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் நிலையில் , ஆரம்பத்திலேயே அந்தந்த நாடுகள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவறிவிட்டது இதுவே இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு காரணமென உலகப் பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனருமான பில்கேட்ஸ் விமர்சித்துள்ளார். ஏற்கனவே பில்கேட்ஸ், உலகை மிகப்பெரிய தொற்றுநோய் தாக்க வாய்ப்புள்ளது என எச்சரித்து வந்ததுடன், உலக நாடுகள் அதை எதிர்கொள்ள தயாராக வேண்டுமென கூறி வந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது, இந்நிலையில்
சீனா மீது அமெரிக்கா தெரிவித்துள்ளார் புகார் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கொரோனா வைரஸை பொருத்தவரையில் மற்ற நாடுகளை விட சீனா திறம்பட கையாண்டுள்ளது , இந்நிலையில் சீனா கொரோனா விவகாரத்தில் பல விஷயங்களை சரியாகவே செய்துள்ளது. ஆனால் கொரோனா விவகாரத்தை மூடி மறைக்க முயன்றது என கூறுவது புறந்தள்ளப்பட வேண்டிய ஒன்று, இது மக்களை திசை திருப்புவதற்காக பேசப்படும் கருத்தாகவே நான் பார்க்கிறேன் . வைரஸ் தோன்றியவுடன் சீனா சரியான முறையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது , அதை முறையாக கையாண்டது , அதே போல் இன்னும் பல நாடுகள் தங்கள் நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியான நேரத்தில் எடுத்ததின் மூலம் பெருமளவில் ஏற்பட இருந்த பொருளாதார நெருக்கடிகளை தவிர்த்துள்ளன. ஆனால் இந்த விவகாரத்தில் அமெரிக்கா போதிய அளவில் கவனம் செலுத்தவில்லை என்றே நான் கூறுவேன்.
அதனால்தான் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது , ஒரு வைரஸ் ஒரு நாட்டை முதலில் தாக்கினால் அந்த நாடு எப்படி நடந்து கொள்ளுமோ அப்படித்தான் சீன நடந்து கொண்டுள்ளது அது ஆரம்ப கட்டத்தில் பல வேலைகளை செய்தது . அதேபோல் அதை திரும்பிப் பார்த்து சில விஷயங்களில் எங்கு தவறிவிட்டார்கள் என்று சொல்லலாம் என அவர் தெரிவித்தார் . அமெரிக்கா சரியான நேரத்தில் பரிசோதனைகளை செய்யவில்லை , கொரோனா தடுப்பு விவகாரத்தில் அமெரிக்கா மோசமாக நடந்து கொண்டது வருத்தம் அளிக்கிறது என அவர் கூறியுள்ளார் . தற்போது மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை தனது நிதி முழுவதையும் கொரோனா பாதிப்புக்கு செலவிட திட்டமிட்டுள்ளது ,குறிப்பாக சுகாதாரம் சார்ந்த வேலைகளுக்கும் மற்றும் குழந்தைகளின் கல்வி திட்டங்களுக்கும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.