உலகின் மிக வயதான பெண்மணி காலமானார்..! ஜப்பான் அரசு அறிவிப்பு !!

ஜப்பானின் வாழ்ந்த உலகில் வயதான மூதாட்டி காலமானார் என அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

World oldest person Kane Tanaka dies in Japan aged 119

ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள புகுவோகாவை சேர்ந்தவர் கேன் தனகா, 119. உலகின் மிக வயதான நபர் என, 2019ல் இவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. இவர் சென்ற 19ஆம் தேதி காலமாகி உள்ளார். எனினும் இந்தத் தகவல்கள் அப்போது வெளியாகவில்லை. இந்த நிலையில் மூதாட்டியின் மரணத்தை அதிகாரப்பூர்வமாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. 

World oldest person Kane Tanaka dies in Japan aged 119

மறைந்த மூதாட்டி தனகா, 1903ம் ஆண்டு பிறந்தவர். கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில், கேன் தனகாவின் 116வது வயதில் உலகின் மிக வயதானவர் என, பெயர் பதிவானது. 2020 செப்டம்பரில் இவரது வயது 117 ஆண்டு மற்றும் 261 நாட்களை எட்டியது.இதையடுத்து, ஜப்பானில் அதிக நாட்கள் வாழ்ந்தவர் என அந்நாட்டு ஆவணங்கள் இவரது பெயரை பதிவு செய்தன.

World oldest person Kane Tanaka dies in Japan aged 119

இவரது மரணத்தை அடுத்து, பிரான்ஸ் நாட்டில் வசிக்கும், 118 வயதைக் கடந்த லுாசில் ராண்டன் என்ற மூதாட்டி, உலகின் மிக வயதான நபராக மாறி உள்ளார். உலகிலேயே அதிக வயதான பெண்மணி என்ற பெருமையுடன் வாழ்ந்து வந்த தனகா காலமானதையடுத்து, பிரெஞ்சுப் பெண்மணியான லூசில் ராண்டன் என்பவர் தற்போது உலகின்மிக வயதான நபராக உள்ளார். அவருக்கு வயது 118.

இதையும் படிங்க : பிக்பாஸ் வீட்டுக்குள், ஒரு நாள் இருந்தா 7.6 லட்சம் பணம்.! அடேங்கப்பா..! வேற லெவல்.!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios