இந்தியாவில் கொரோனா வைரஸ் ஜூலை மாதத்தில் உச்சக்கட்டத்தை எட்டும் என்றும் பின்னர் அது படிப்படியாக குறையும் என்றும் உலகச் சுகாதார அமைப்பின் சிறப்பு தூதர் டேவிட் நபாரோ தெரிவித்துள்ளார் , கொரோனா வைரஸ் இந்தியாவின் மே மாதத்தில்  உச்சத்தை அடைந்து ஜீன் மாதம் வாக்கில் குறையும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது   ஜூலை மாத இறுதியில் வைரஸ்  உச்சக்கட்டத்தை அடையும் என ஐநா சிறப்பு தூதர்  தெரிவித்திருப்பது ஒட்டு மொத்த இந்தியர்களையும் கதிகலங்க வைத்துள்ளது,   இப்போது சுமார் 45 நாட்களுக்கும் மேலாக வாழ்வாதாரங்களை இழந்து வீடுகளில் முடங்கி அல்லல் பட்டு வரும் நிலையில்  மீண்டும் ஜீலை மாதத்தில்தான் வைரஸ் உச்சகட்டத்தை அடையும் என்றால்,  மீண்டும் ஒரு ஊரடங்கை எதிர்கொள்ள வேண்டி வருமோ என்ற அச்சம்தான் காரணம்.  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது , 

தற்போது இந்தியாவிலும் இந்த வைரஸ் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது . இதுவரை 59 ஆயிரத்து 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் ஆயிரத்து  986 பேர் உயிரிழந்துள்ளனர் இதுவரை 17 ஆயிரத்து 898 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர் வைரஸ் ஒவ்வொருநாளும் அதனுடைய கொடூர முகத்தை காட்டிக் கொண்டே இருப்பதால் இந்தியாவின் நோய்த்தொற்றின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது .  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் கோவிட்-19 சிறப்பு தூதர் டேவிட்  நபாரோ இந்தியாவைப் பொருத்தவரையில் சரியான நேரத்தில் கட்டுப்பாடுகளை விதித்து வைரஸை குறிப்பிட்ட அளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது இந்தியா வைரஸை மிகச் சிறப்பாக நிர்வகித்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.   விரைவாக செயல்பட்டதால் இந்தியாவில் வைரஸ் இப்போது  கட்டுப்பாட்டுக்குள் உள்ளது இந்தியா போன்ற அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட நாட்டில் இந்த அளவிற்கு வைரஸை கட்டுப்படுத்துவது கடினம் ஆனால் அதை இந்தியா சிறப்பாக செய்துள்ளது.

மகாராஷ்டிரா குஜராத் ராஜஸ்தான் டெல்லி தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் அது நகர்ப்புறங்களில் மட்டுமே இருக்கிறது இந்தியாவில் தற்போது உள்ள தொற்று  எண்ணிக்கை அதிகம் தான் ஆனால் இந்திய மக்கள் தொகையுடன் இதை ஒப்பிடும்போது இது மிகக் குறைவு ,  ஆனால் தற்போதுள்ள ஊரடங்கு நீக்கப்பட்டால் வைரஸ் உடனே மறைந்து விடாது, அப்போது அது இன்னும் அதிக அளவில் பரவக்கூடும் ,   ஆனால் மக்கள் அதை கண்டு அஞ்சக்கூடாது ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் ஜூலை இறுதியில் வைரஸ் உச்சக்கட்டத்தை அடையும் அது மிக மோசமாக இருக்கும் பின்னர் மெல்ல மெல்ல குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வருமென அவர் எச்சரித்துள்ளார் .