கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 2.5 கோடி மக்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது .  இதன் காரணமாக மூன்று கோடியே 40 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வருமான இழப்பு நேரிடும் என ஐநா சபைக்கான தொழிலாளர் நல அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது .  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ்  சுமார் 120 க்கும் அதிகமான நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது .  கொரோனாவால்  மிகப் பெரிய வணிக வளாகங்கள் , சினிமா தியேட்டர்கள் ,  மதுக்கூடங்கள் ,  கேலிக்கை அரங்குகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது . 

 

இந்நிலையில் சில நாடுகளில் சராசரியான பண நடமாட்டமும் அரசின் வருமானமும் பாதியாக  குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது .  நோய்க்கான வைரஸ் பாதிப்பால் மேலும் சுமார் இரண்டரை கோடி மக்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐநா சபை தகவல் வெளியிட்டுள்ளது .  இதன் எதிரொலியாக 3 கோடியே 40 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வருமான இழப்பு ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான தொழிலாளர் நல அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது .  சீனாவில் தோன்றிய கொரோனா  உலகம் முழுவதும் நான்கு கட்டங்களாக பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிலையில் இந்தியா தற்போது இரண்டாவது கட்டத்தில் உள்ளது .  இந்தியாவில்  153 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது .

 

இந்தியாவின் மத்திய மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகளின் மூலமாக கொரோனா வைரஸ் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது .  நேற்று முன்தினம் வரை நாடு முழுவதும் 137 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் ,  நேற்று புதிதாக 13 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது .  இவர்களில் 14 பேர் குணமடைந்து வீடு திரும்பினார் .  மேலும் வைரஸ் அறிகுறியுடன் 5 ஆயிரத்து 700 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் .  இந்நிலையில் கொரோனா வைரசில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 8 ஆயிரத்து 944 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது .