கப்பல் நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது அதில் பயணித்த சீனப் பெண்கள் ஒருவருக்கு கொரோனா வைரஸ்  அறிகுறி தென்பட்டதால் அவருடன் பயணித்த சுமார் 6 ஆயிரம் பயணிகள் பீதியில் உறைந்தனர்,  இந்த தகவல் வெளியானதால்  அந்தக் கப்பலை தங்களது நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது என இத்தாலி நாட்டு அதிகாரிகள் மறுத்ததால் அந்தக் கப்பல் நடுக்கடலில் பலமணிநேரம்  தத்தளித்த  சம்பவம் நிகழ்ந்துள்ளது.  கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா  வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது .  ஆரம்பத்திவேயே வேகம் காட்டிய அந்த வைரஸ் தற்போது சீனா முழுவதும் பரவி சீன மக்களை கொடூரமாக கொன்று குவித்து வருகிறது 

இந்த புதியவகை வைரசால்  சீனாவில்  திரும்பிய பக்கமெல்லாம் மரண ஓலம் கேட்கிறது.  இந்த வைரஸ் தற்போது ,  அமெரிக்கா ,  பிரான்ஸ் ,  இத்தாலி , கனடா இங்கிலாந்து என பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது . இந்நிலையில் தங்கள் நாட்டுக்குள்  அந்த வைரஸ் வந்து விடக்கூடாது என்பதற்காக அந்தந்த நாடுகள் சீனாவுக்கான விமான போக்குவரத்தை முற்றிலுமாக தடை செய்துள்ளன .   அதேபோல் சீனர்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே மற்ற நாட்டுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர் . இந்நிலையில் சுமார் 6000 பயணிகளுடன் கப்பல் ஒன்று நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது அதில் பயணித்த சீனப் பெண்ணுக்கு கொரோனா  வைரஸ்  அறிகுறிகள் தென்பட்டால் கப்பலில் இருந்தவர்கள் மிகுந்த பீதி அடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.   அதாவது  இத்தாலி நாட்டைச் சேர்ந்த பிரம்மாண்ட சொகுசு கப்பல்  கோஸ்டா சிமியர்லடா என்ற கப்பல் உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய கப்பல் என கருதப்படுகிறது . 

இந்தக் கப்பல் சுமார் 6000 உல்லாச பயணிகளுடன் சுமார் 1000 ஊழியர்களுடன் நடுக்கடலில் பயணம் செய்துகொண்டிருந்தது ,  அதில் சுமார் 751 பேர் சீன பயணிகள் ஆவர் .  வடக்கு இத்தாலியில் இருந்து கிளம்பிய இந்த கோஸ்டா சிமியர்லடா ,  பார்சிலோனா ,  பால்மா  வழியாக ரோமுக்கு அருகில் இருக்கும் சிலிடாவிக்கியா என்ற துறைமுகத்துக்கு வந்தது அப்போது இந்த கப்பலில் பயணித்த 54 வயது மதிக்கத்தக்க சீனப்பெண் ஒருவருக்கு கோஸ்டா கொரோனா தொற்று  இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன .  இதனால் அவருடன் பயணித்த சுமார் 6000  பயணிகள் கதிகலங்கிப் போயினர் .  கொரோனா வைரஸ் பாதித்த பெண்ணுடன் தங்கள் பயணிப்பதால் தங்களுக்கும் அது பரவுவதற்கு வாய்ப்புள்ளது  என்ற அச்சத்தில் உறைந்தனர் . 

இந்த தகவல் அறிந்த இத்தாலி குடியுரிமை அதிகாரிகள் அந்தக் கப்பலை தங்களது துறைமுகத்திற்கு அனுமதிக்க மறுத்துவிட்டனர் .  இதனால் சுமார் 35 மைல் தொலைவில் கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது . கப்பலில்  அந்த பெண்ணையும் அந்த பெண்ணின் கணவரையும் ஒரு தனி அறையில் தனிப்படுத்திய மருத்துவர்கள் கப்பலில் அந்த பெண்ணின்  ரத்த மாதிரி எடுத்து பரிசோதித்ததில்   அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிய வந்தது இதையடுத்து கப்பலில் இருந்த  பயணிகளை நிம்மதி பெருமூச்சிவிட்டனர்.  பின்னரே  அந்த கப்பலை துறைமுகத்துக்குள்  அனுமதிக்கப்பட்டது.  கொரோனா வைரஸ் பீதியில் கப்பலில் 38 மணி நேரத்திற்கும் மேலான பயணிகள் தத்தலித்தனர் என்பது குறிப்பிடதக்கது.