உலகிலேயே மிக நேர்த்தியான, அழகான கையெழுத்துக்கு எடுத்துக்காட்டாக ஒரு மாணவியின் கையெழுத்து உள்ளது.
பொதுவாக நம் அனைவரின் கையெழுத்தும் ஒரே மாதிரி இருக்காது. ஒவ்வொருவரும், வித்தியாசமான கையெழுத்து பாணிகளைக் கொண்டுள்ளனர். சிலரின் கையெழுத்து சுமாராக இருந்தாலும், சிலர் நேர்த்தியாக மிகவும் அழகாக எழுதுவார்கள். சிறு வயதிலிருந்தே, நம் அனைவருமே கையெழுத்துப் பயிற்சியில் ஈடுபட்டாலும் சிலருக்கு மட்டுமே அழகான கையெழுத்து இருக்கும். அந்த வகையில் உலகிலேயே மிக நேர்த்தியான, அழகான கையெழுத்துக்கு எடுத்துக்காட்டாக ஒரு மாணவியின் கையெழுத்து உள்ளது. ஆம். நேபாளத்தைச் சேர்ந்த பிரகிருதி மல்லா என்ற மாணவியின் கையெழுத்து தான் அது. பிரகிருதி 8-ம் வகுப்பு படித்த போது எழுதி கையெழுத்து ஒன்று இணையத்தில் பரவியது.. அந்த பேப்பரில் இருந்த எழுத்துக்கள் உலக கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தது. அவரது கையெழுத்தின் அழகைக் கண்டு பலரும் வியந்து பாராட்டினர்.
பறவைகள் தற்கொலை செய்யும் இந்தியாவின் மர்ம கிராமம்.. மிகப்பெரிய பேரழிவு ஏற்படுமா?
பிரகிருதி மல்லா, உலகிலேயே சிறந்த கையெழுத்து கொண்டவர் என்ற பட்டம் பெற்றவர், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 51வது ஸ்பிரிட் யூனியன் விழாவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைமை மற்றும் குடிமக்களுக்கு வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார். 2022 ஆம் ஆண்டில், நேபாளத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் பிரகிருதி மல்லாவை அங்கீகரித்து ஒரு ட்வீட்டை வெளியிட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஸ்பிரிட் யூனியனின் 51வது ஆண்டை கொண்டாடும் வகையில், நேபாள இளம்பெண் பிரகிருதி மல்லா, உலகின் சிறந்த கையெழுத்து விருது பெற்றதாக அதில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பிரகிருதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரக அதிகாரிகளிடமிருந்து அங்கீகாரம் பெற்றார்.
பிரகிருதி மல்லா எழுதிய பேப்பரும் பகிரப்பட்டது. அதில் அவரது கையெழுத்து உண்மையிலேயே மிகவும் அழகாக நேர்த்தியாக இருப்பதை பார்க்க முடிகிறது. அதில் ஒவ்வொரு எழுத்துமே மிக நேர்த்தியாக அழகாக எழுதப்பட்டிருந்தது. அவரின் கையெழுத்து திறமையை கண்டு ஒரு கணினியே வெட்கப்படலாம் என்று கூறினாலும் அது மிகையாகாது.
நன்றாக இருக்கும் கையெழுத்து தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் மாணவர்கள் தங்கள் கர்சீவ் எழுதும் திறன்களை மேம்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள். பள்ளி, கல்லூரிகளில் நேர்த்தியாக அழகாக எழுதும் மாணவர்கள், பெரும்பாலும் அதிக மதிப்பெண்களைப் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
