தனிமை கொடுமை தான்.. அதுக்காக இப்படியா? - டார்ச்சர் செய்த பெண்மணி.. கடுப்பாகி கைது செய்த போலீஸ்!
விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ஆரஞ்சு மிட்டாய் படம் பணியில் பலரை டார்ச்சர் செய்துள்ளார் அந்த பெண்மணி
இளம் பருவத்தில் தனிமையை பெரிய அளவில் விரும்பும் மனிதன், ஒரு வயதை தாண்டியதும் உறவுகளை எதிர்பார்ப்பது இயல்பான ஒன்று தான். 50 வயதை தாண்டிவிட்டால் தனிமை கொடுமையானதாக மாறுகின்றது. இந்நிலையில் ஜப்பான் நாட்டில் தனிமை தன்னை வாட்டிய நிலையில் ஒரு பெண்மணி சுமார் 2,761 முறை அவசர கால எண்ணிற்கு அழைத்து தனக்கு ஏதோ ஒரு விதத்தில் உடல்நலம் சரியில்லை என்று கூறி படாதபாடு படுத்தியுள்ளார்.
விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ஆரஞ்சு மிட்டாய் படம் உங்களுக்கு இப்பொது நினைவில் வந்திருக்கும். ஆனால் அவரை விட அதிகமாக டார்ச்சர் செய்துள்ளார் இந்த 51 வயது பெண்மணி ஹிரோகோ ஹடகாமி. ஜப்பான் நாட்டு ஊடகம் வெளியிட்ட தகவலின்படி, சுமார் மூன்று ஆண்டுகளாக அவர் இப்படி செய்துவந்த நிலையில், ஹடகாமியை கடந்த ஜூலை 13 அன்று போலீசார் கைது செய்துள்ளனர்.
தற்போது வேலையில் இல்லாத அந்த பெண், பல்வேறு நோய்களால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது வீடு மற்றும் அக்கம் பக்கத்தில் இருக்கும் அலைபேசிகள் மூலம் அடிக்கடி அவசர எண்ணுக்கு அழைப்புகளை விடுத்துள்ளார். "எனக்கு வயிற்றுவலி உள்ளது", "நான் அதிக அளவு மருந்து உட்கொண்டுவிட்டேன்," "என் கால்கள் தொடர்ந்து வலிக்கிறது", என்று எண்ணற்ற குறைகளை கூறி அவர் போன் செய்துள்ளார். ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று அழைப்புகள் என்று, சுமார் 3 வருடமாக இந்த செயலில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த போலி SMS வந்தா நம்பாதீங்க.. உங்கள் தகவல்கள் திருடப்படலாம்.. சிங்கப்பூர் காவல்துறை எச்சரிக்கை..
கடந்த ஆகஸ்ட் 15, 2020 முதல் மே வரை பல முறை அந்த பெண் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு கூட இப்படிப்பட்ட அழைப்புகளை விடுத்துள்ளார். ஏன் பலமுறை அவர் தீயணைப்புத் துறையிடம் கூட சில தேவையற்ற அழைப்புகளை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பலமுறை ஜப்பான் நாட்டின் பல அவசர சேவை நிறுவனங்கள் அவரை கண்டித்தும் அந்த பெண் மாறவில்லை.
இந்த சூழலில் தான் வேறு வழியின்றி அந்த பெண்மணி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஜப்பான் நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். கேட்பதற்கு சற்று நகைச்சுவையாக இருந்தாலும், அந்த பெண்மணியின் தனிமை அவரை மிகவும் காயப்படுத்தியுள்ளது என்று தான் கூறவேண்டும். அதற்காக அவசர சேவை அதிகாரிகளை இப்படி அலைக்கழிப்பது குற்றம் தான்.
ஆஸி., கடற்கரையில் ஒதுங்கிய மர்மப் பொருள்! சந்திரயான்-3 விண்கலத்தின் ஒரு பகுதியா?