Asianet News TamilAsianet News Tamil

உணவு வாங்கணும்.. மக்களிடம் பணம் கேட்ட பெண்.. தடுத்து நிறுத்திய போலீஸ் - ஏன்? சிங்கப்பூரில் உள்ள சட்டம் அப்படி!

Singapore : சிங்கப்பூரில் 69 வயதுடைய பெண் ஒருவர், தனது கையில் நிறைய சாமான்களை எடுத்துக்கொண்டு, ஆர்ச்சர்ட் வீதியில் செல்லும்போதும், அங்குள்ள மக்களிடம் பணம் கேட்டதை கண்ட போலீசார், அவரை உடனே தடுத்து தற்போது விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Women got money from strangers in singapore streets police enquiry started do you know why ans
Author
First Published Oct 16, 2023, 4:34 PM IST

என்ன நடந்தது?

சிங்கப்பூரில் வழிப்போக்கர் ஒருவர் கடந்த ஜூலை 2023 முதல் சிங்கப்பூரில் குறிப்பிட்ட ஒரு சாலையில் காலை 10 மணி முதல் 11 மணி வரையும் அல்லது மாலை 3 முதல் 4 மணி வரையும் லக்கி பிளாசா என்ற இடத்தின் அருகே சில பைகளை கையில் எடுத்துக்கொண்டு, அங்கு செல்லும் நபர்களிடம் தனக்கு உணவுக்கு காசு தருமாறும், அதே போல தன்னுடைய இல்லத்திற்கு செல்ல வழிச் செல்வதற்கு காசு வேண்டும் என்றும் ஒரு பெண்மணி கேட்பதை கண்டுள்ளார். 

இரண்டு மூன்று மாதங்களாக அதே நேரத்தில் அவர் அந்த பெண்மணியை அங்கு சந்தித்து நிலையில் கடந்த அக்டோபர் 8ம் தேதி போலீசாருக்கு இது குறித்து அந்த நபர் தகவல் அளித்துள்ளார். ஆனால் அன்று அவர்கள் அங்கு வந்தபோது அந்த பெண்மணி அங்கு வரவில்லை. இதன் பிறகு கடந்த நேற்று அக்டோபர் 15ம் தேதி அந்த பெண்மணி மீண்டும் அங்கு வந்த நிலையில், இதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அமைதியாக நின்று அந்த பெண் செய்வதை நோட்டமிட்டுள்ளனர். 

ஷாக் கொடுத்த ஷெரிகா... 26 வயதில் மரணம்... உலக அழகி போட்டியில் கலக்கியவருக்கு இப்படி ஒரு வியாதியா!

அப்பொழுது அந்த பெண் சாலையில் நடந்து செல்பவர்களிடம் சென்று பணம் கேட்பதை அவர்கள் பார்த்துள்ளனர். சிங்கப்பூர் சட்டப்படி யாசகம் பெறுவது குற்றமாகும், அதிலும் குறிப்பாக பொது வெளியில் மக்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் செயல்படும் நபர்களுக்கு, இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 5000 சிங்கப்பூர் டாலர் வரை அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும் அந்த பெண்மணி வெளிநாட்டு ஊழியராக இருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படும், இந்த சூழலில் அவரிடம் தற்பொழுது தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் வெளிநாட்டு ஊழியராக இருந்தால், குடிவரவு அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்படுவார். அல்லது அவர் சிங்கப்பூராராக இருந்து, உண்மையில் தனது வாழ்வாதாரத்திற்காக கஷ்டப்பட்டு வருகிறார் என்றால், அரசு அவருக்கு வேண்டிய உதவிகளை செய்யும். 

சிங்கப்பூரை பொறுத்தவரை House To House and Street Act என்கின்ற சட்டத்தின் படி, வீடு வீடாக சென்று நிதியை வசூல் செய்யக்கூட தனியாக லைசென்ஸ் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யாசகம் பெறுவது சிங்கப்பூர் சட்டத்தின்படி குற்றமாகும். இருப்பினும் சிங்கப்பூரில் ஓரிரு இடங்களில் மக்கள் யாசகம் கேட்பதை இன்றளவும் நம்மால் பார்க்க முடிகிறது.

போர் மேகங்கள்: இஸ்ரேலில் இருந்து ஏசியாநெட் செய்தி சிறப்பு கவரேஜ்!

Follow Us:
Download App:
  • android
  • ios