தோழியின் மகன் மேல் காதல்..? 16 வயது இளைஞனை கரம் பிடித்த 41 வயது பெண் - நான்கு நாளில் பிரிந்தது எப்படி?

இந்தோனேஷியா நாட்டை சேர்ந்த மரியானா என்ற பெண்ணுக்கு, கெவின் என்ற பையனை அவருடைய சிறுவயதில் இருந்தே மிகுந்த பழக்கம். அந்த இளைஞன் சிறுவனாக இருந்தபோதிலிருந்தே இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தனில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள மரியாணாவின் கடைக்கு தின்பண்டங்கள் வாங்க அடிக்கடி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
 

Women 41 married her friends son who is 16 years old pair separated after 4 days

அதுமட்டுமல்லாமல் கடந்த சில ஆண்டுகளாகவே கெவினின் தாயான 37 வயதான லிசாவின் நல்ல தோழியாக இருந்துவந்துள்ளார் மரியானா. இதுமட்டுமல்லால் இருவரது வீடும், சில அடி தூரத்தில் தான் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தான் லிசாவின் மகன் கெவின் மீது மரியானாவிற்கு காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த காதலை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்லும் நிலையில் அந்த மைனர் பையனுக்கும், 41 வயது பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. கெவின் தன்னை விட 25 வயது மூத்த பெண்ணான மரியானாவை மணந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தாய் லிசாவும் கூறியது குறிப்பிடத்தக்கது. அந்த இருவரும் ஜோடியாக நிற்கும் புகைப்படம் ஒன்றை லிசா பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

நகரத்திற்கும் பரவி நாசம் செய்த காட்டுத் தீ! பலி எண்ணிக்கை 89 ஆக உயர்வு... பழமையான ஆலமரம் தீக்கிரை!

மரியானாவிடம் உள்ள சொத்திற்காகத் தான் அவர் தனது மகனை திருமணம் செய்து கொடுத்ததாக வெளியான தகவல்களை, வெறும் வதந்தி என்று கூறி மறுத்துள்ளார் லிசா, மேலும் இந்த திருமணத்திற்கு கெவின் சம்மதம் தெரிவித்ததாகவும் அவர் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். 

எது எப்படி இருந்தாலும், அந்த தம்பதி திருமணமான நான்காவது நாளில் பிரித்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் காதல் கதை வைரலான நிலவுபோல், இது பொதுமக்களிடையே பேசுபொருளாக மாறி, மேற்கு கலிமந்தனில் உள்ள இந்தோனேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (KPAI) கவனத்திற்கு இந்த விஷயம் சென்றுள்ளது.

இந்தோனேசியாவில் பெற்றோரின் அனுமதியுடன் ஆண் குழந்தைகள் (மற்றும் சிறுமிகள்) திருமணம் செய்துகொள்ளும் வயது 19. ஆகையால் 19 வயதாகும் வரை அந்த இருவரும் தனித்தனி படுக்கைகளில் தூங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அண்ட் தம்பதியினரிடம் முதலில் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. 

மேலும் இந்தோனேஷியா நாட்டின் சட்டதிட்டங்கள்படி ஒரு ஆண் மற்றும் பெண், 21 வயதை அடையும்போது பெற்றோரின் அனுமதி இல்லாமல் திருமணம் செய்துகொள்ளம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இந்த வழக்கில் மரியானா மீது, மைனர் பையனை திருமணம் செய்ததற்காக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனை கண்டு பீதியான அந்த லிசா என்ற தாய், மரியானவை தற்போது விவாகரத்து செய்துவிடுமாறு மகனிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு எவ்வளவு தங்கம் கொண்டு வரலாம்?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios